போர்களமாக மாறும் ஸ்மார்ட் போன்கள் - பப்ஜியின் விளைவு

  சாரதி குமரன்   | Last Modified : 23 Oct, 2018 07:02 pm
pubg-makes-our-smart-phone-dangerous

டென்சண்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பப்ஜி, இனணய விளையாட்டு, கிராமம் முதல் நகரம் வரை, சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரின் ஸ்மார்ட் போன்களை போர்க்களமாக மாற்றியுள்ளது

பப்ஜி, இது ஸ்மார்ட் போன் விளையாட்டை அடுத்த பரிணாமத்திற்க்கு கொண்டு சென்றுள்ளது. பலரால் ஈர்க்கப்பட்டு காற்றை போல பட்டித் தொட்டியெல்லாம் பரவியுள்ள இந்த விளையாட்டை 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த விளையாட்டை குழுவாகவோ அல்லது தனித்தோ விளையாடலாம். இந்த விளையாட்டில் 100 பேரை கொண்ட போட்டியாளர்கள் விமானம் மூலமாக ஒரு தீவில் இறக்கி விடப்படுவர். அதில் இறுதி வரை போராடி உயிருடன் இருக்கும் அந்த ஒரு போட்டியாளர் வெற்றியாளராவார். இதன் சிறப்பு அம்சன் நாம் குழுவுடனும், சக போட்டியாளருடனும் செல் போனில் பேசுவது போன்று பேசிக் கொண்டே விளையாடலாம். இந்த விளையாட்டின் தோற்றம் முழுக்க சண்டை, போர், துப்பாக்கி, ரத்தம் என வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. என பப்ஜி விளையாடியவர்கள் இணையத்தில் தன் அனுபவங்களை பதிவிட்டிருந்தனர். இந்த விளையாட்டின் காட்சியும் கிராப்பிக்ஸ்யும் விளையாடுயோரை ஈர்க்கும் வகையில் உள்ளது. அதில் நமக்கு பதிலாக விளையாடும் அந்த பிரதிபிம்பம் மனித தோற்றத்தை போல் உள்ளது. அதனால் இதை நாமே களத்தில் இறங்கி விளையாடுவது போன்ற அனுபவத்தை அளிக்கிறது. இதை தொடர்ச்சியாக விளையாடுவோரின் எண்ணமும் செயலும் முற்றிலும் இதில் வரும் கதாபாத்திரத்தின் நடத்தையை பிரதிபலிக்கும் படி வன்முறை, கோபம், வன்மம் போன்ற வெறித்தனங்கள் வெளிப்படுகிறது. இதனால் இந்த விளையாட்டை விளையாடுபவரின் ஸ்மார்ட் போன் மட்டும் இல்லாமல் வாழ்க்கையும் போர்களமாக மாறியிருக்கிறது.

விளையாட்டு தோற்றம் 
 PUBG என்பதின் விளக்கம் PLAYER UNKNOWN BATTLE GROUND. மனித பிரதிபிம்பத்தை கொண்ட அந்த உருவம், விளையாடும் களத்தில் இறக்கி விடப்படுகிறது. அந்த தீவில் இருக்கும் கட்டிடங்களில் துப்பாக்கி, உடைகள், பை, தலைகவசம், ஹெல்த் கிட், போன்று அந்த  விளையாட்டுக்கு தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கிறது. அந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தன் சக்திகளை மேம்படுத்தி, தம்மை எதிர்க்க வரும் எதிராளியை துப்பாக்கியால் சுட்டு, அவர்கள் உடமைகளையும் சேர்த்து பறித்துக்கொள்ளும் வகையில் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மனதை மயக்கும் இந்த ஒட்டுமொத்த வடிவமைப்பின் விளைவாய் விளையாடுபவர்கள் அந்த கதாப்பாத்திரத்தின் நடவடிக்கைகளை நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றுகிறார்கள். அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என விளையாடியவர்கள் தெறிவித்தனர். இதை ஒரு முறை விளையாடியவர்கள் நிச்சயம் தொடர்ந்து விளையாடும் மனநிலைக்கு தள்ளப்படுவார்கள். அந்த அளவிற்க்கு பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார்கள் நம் இளைஞர்கள். இந்த விளையாட்டின் தோற்றத்தை கொண்ட பல விளையாட்டுக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதையும் நம் இளைய தலைமுறையினர் பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கி உள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close