வாட்ஸ் அப் சாட்டிங்கை கலர்புல்லாக்க வந்துவிட்டது ஸ்டிக்கர்ஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 27 Oct, 2018 07:32 pm
you-can-now-send-stickers-to-your-friends-in-whatsapp

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் மிகவும் எதிர்பார்த்த இன்ஸ்டாகிராம், மெசன்ஜர், ஹைக்கில் இருந்த ஸ்டிக்கர் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. உங்கள் வாட்ஸ் அப்பை உடனடியாக அப்டேட் செய்வதன் மூலம் இந்த சேவையை ஆண்ட்ராய்டு போனிலும் பெற முடியும். 

உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். அதிக பயனர்களை தன்னுள் அடக்கிஆளும் வாட்ஸ் அப் அடிக்கடி புதுபுது அப்டேட்களை வெளியிட்டு பயனர்களை தன்வசம் வைத்துள்ளது. சமீபத்தில், இரவிலும் கண்கூசாமல் பயன்படுத்துவதற்கு ஏதுவான டார்க் மோட், செயலியை திறக்காமலேயே திரையிலேயே பதில் அனுப்பும் வசதிகள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் தற்போது தற்போது, பயனர்கள் மிகவும் எதிர்பார்த்த ஸ்டிக்கர் அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராம், மெசன்ஜர், ஹைக் போன்ற சேட்டிங்க் செயலியில் ஏற்கனவே இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இளைஞர்கள் பெருமளவில் எதிர்பார்த்த ஸ்டிக்கர்ஸ் வாட்ஸ் அப்பிலும் வந்துவிட்டது. இத்துடன் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் ஸ்டோர் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் சென்று பயனர்கள் தங்களுக்கு தேவையான ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close