வாட்ஸ் ஆப்பில் டைப் செய்யாமலேயே அழகிய தமிழ்!- புது அப்டேட்

  ஐஸ்வர்யா   | Last Modified : 28 Oct, 2018 05:42 pm
whatsapp-update

கைவலிக்க இனி தமிழில் டைப் செய்ய வேண்டாம். தமிழ் எழுத தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம். தமிழ் டைப்பிங் கஷ்டம் என்பது இனி இல்லை. எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் நீங்கள் பேசினாலே தமிழில் அதுவாகவே டைப் செய்துக்கொள்ளும் புதிய முறை வாட்ஸ் அப்பில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் வந்திருக்கும் இந்த புது அப்டேட்டை பெறுவதற்கு பிளே ஸ்டோருக்கு சென்று,  Gboard app என டைப் செய்து டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக Input language ல் தமிழ் செலக்ட் செய்ய வேண்டும் அதில் gboard ஐ செலக்ட் செய்ய வேண்டும். இதற்கடுத்து வாட்ஸ் அப் சென்றால் வழக்கம்போல இருக்கும் கீபோர்டு சற்றே வித்தியாசமாக தெரியும். அதில் தமிழ் கீ போர்டை செலக்ட் செய்ய வேண்டும். கீபோர்ட் மேலே வலதுபுறம் பச்சை கலர் மைக் இருக்கும் அதில் பேசக்கூடாது. அந்த பச்சைக் கலர் மைக்குக்கு கீழே கருப்பு கலரில் சின்ன மைக் இருக்கும். ஜஸ்ட் அதை பிரஸ் செய்துவிட்டு கையை எடுத்துவிடலாம். speak now என வரும் போது நீங்கள் பேசினால் உடனே தமிழில் டைப் ஆகும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தூய தமிழில் பேச வேண்டும். செய்தி வாசிப்பாளர்களை போல தெளிவாக பேசினால் வார்த்தை மாறாமல், பிழை இல்லாமல் அச்சு அசலாக நீங்கள் டைப் செய்தது போலவே வரும். ஆன்ட்ராய்டு மொபைலில் மட்டுமே இந்த அப்டேட் தற்போதைக்கு செயல்படும். 

 

Newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close