வாட்ஸ்ஆப்பில் யாருடன் அதிக நேரம் செலவிடுகிறீர்கள்: தெரிந்துக் கொள்ள ஒரு வழி

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2018 03:24 pm
how-to-check-who-you-are-talking-the-most-in-whatsapp

வாட்ஸ்அப்பில் நீங்கள் யாருடன் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள ஒரு வழி இருக்கிறது. 

வாட்ஸ்ஆப்பில் தொடர்ந்து பல அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இது தான் மிகவும் பிரபலமான மெசேஜிங் ஆப்பாக உள்ளது. இதனை ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்தியாவை பொறுத்தவரை இதனை கிட்டத்தட்ட 200மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்துவது மிக எளிமையான ஒன்று என்பது வாட்ஸ்ஆப் மீதான மக்களின் ஈர்ப்புக்கு காரணமாக உள்ளது. 

இதில் நீங்கள் யாருடன் நீண்ட நேரம் பேசுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள வாட்ஸ்ஆப்பில் ஒரு வழி இருக்கிறது. 

அதற்கு... 

  1. வாட்ஸ்ஆப் செட்டிங்கிற்கு செல்லவும். 
  2. அதில் டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ்-ஐ க்ளிக் செய்யவும். 
  3. அதில் இருக்கும் ஸ்டோரேஜ் யூசேஜ் என்பதை க்ளிக் செய்யவும். 
  4. பின்னர் டேட்டாவின் அடிப்படையில் யாருடன் அதிகம் பேசியுள்ளீர்கள் என்ற பட்டியல் வரும். 

இதன் மூலம் இணைய சேவையை விரயம் செய்வதையும் தடுக்கலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close