போன் பாஸ்வேர்ட் மறந்துவிட்டீர்களா?- ஈசியா சரிய செய்ய பண்ணலாம்

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 02:52 pm
easy-ways-to-unlock-your-android-phone

ஆண்ட்ராய்டு மொபைல் போனில் 3 அல்லது 5 முறை பாஸ்வேர்டை தவறாக பதிவிட்டுவிட்டால் அது லாக் ஆகிவிடும். இதனை சரி செய்வதற்கு ஈசியான வழிமுறைகள் இருக்கின்றன.

நீங்கள் 3 முறை தவறாக பாஸ்வேர்டை பதிவு செய்து பின்னர் 30 நிமிடங்கள் உங்களை எச்சரிக்கும். அதையும் மீறி அடுத்த முறை நீங்கள் மீண்டும் தவறான பாஸ்வேர்டை பதிவு செய்தால் போன் லாக் ஆகி விடும். 

லாக்கில் இருந்து மீட்க மொபைல் அல்லது கணினி வழியாக உங்கள் கூகுள் கணக்கு மூலமாக ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் நுழைய வேண்டும். இதற்கான இணைய முகவரி https://myaccount.google.com/find-your-phone ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜர் தளத்தில் உங்கள் ஃபோனில் பதிவுசெய்துள்ள ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடவும். 

இதற்குள் நுழைந்தவுடன் அதில் உங்கள் ஆண்ட்ராய்டு கணக்கு குறித்த விவரங்கள் காட்டப்படும். ஒருவர் பல போன்களில் ஒரே கணக்கைப் பயன்படுத்தலாம் என்பதால், வெவ்வேறு போன்கள் காட்டப்படவும் வாய்ப்பு இருக்கிறது. 

இப்போது தேவையான டிவைசை மட்டும் தேர்வு செய்யுங்கள். அடுத்து அதில் இடம் பெற்றுள்ள லாக் ஸ்க்ரீன் என்ற வசதியை க்ளிக் செய்யவும்.அதில் உங்கள் புதிய பாஸ்வேர்டை பதிவு செய்யவும். பின்னர் அந்த போனை லாக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் போனை எடுத்து அதில் புதிதாக கொடுத்த பாஸ்வேர்டை பயன்படுத்தி திறக்கலாம். 

இதனை வேறு ஒரு வழியிலும் செய்யலாம். அது கூகுள் அஸிஸ்டெண்ட் மூலமாக செயல்படும். இதனை பயன்படுத்த  முன்பே உங்கள் போனில் கூகுள் அஸிஸ்டெண்ட் இருக்க வேண்டும். இருந்தால் கூகுள் அஸிஸ்டெண்ட் செயலியில் நம்முடைய குரலை  பதிந்து வைத்துக் கொண்டு ஸ்கிரினை அன்லாக் செய்லாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close