2019ல் சைபர் தாக்குதல் அதிகமாக  இருக்குமாம்!

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 11:16 am
cyber-breaches-abound-in-2019

2018ல் சைபர் தாக்குதல் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக இருந்தது. இதனைவிட 2019ல் இந்த சைபர் ரீதியான தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இதுவரை உலக பொருளாதாரத்தில் சைபர் பிரீச்சிங் பெரியளவில் இருந்தது. இவை அனைத்து வரும் காலங்களில் நாம் நினைக்காத இடத்தில் எல்லாம் அதிகரிக்கும் என்று தெரிகிறது. 

ஈசியான பணிகளுக்காக அனைத்தையும் டிஜிட்டலைசேஷனாக மாற்றியது தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இது அதிகரிக்க அதிகரிக்க தாக்குதல்களும் அதிகரிக்கும். உதாரணமாக ஒரு சாஃட்வேரின் அப்டேட்கள் மூலம் கூட தாக்குதல் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

கடந்தாண்டு சீனாவில் செயற்கை கோள் தொடர்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதே போல வரும் அடுத்தாண்டு தென்கிழக்கு ஆசிய டெலிகாம் கம்பேனிகள் பல சைபர் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இதனை தடுக்க தனி நபரோ, ஒரு நிறுவனமோ தங்களது சைபர் பாதுகாப்பு குறித்து உறுதியாக இருக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close