வாட்ஸ்ஆப்-பில் பழைய மெசேஜ் எல்லாம் காணாமல் போகுதா?

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 03:30 pm
whatsapp-old-chats-are-mysteriously-disappearing-and-this-could-be-the-reason-why

வாட்ஸ்ஆப் மெசேஞ்சரில் தொடர்ந்து பலரது பழைய மெசேஜ்கள் காணமால் போயுள்ளது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?

சர்வதேச அளவில் அதிகமான பயன்பாட்டாளர்களை கொண்டது வாட்ஸ்ஆப். தனது பயன்பாட்டாளர்களை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. ஆனாலும் தொடர்ந்து வாட்ஸ்ஆப் மீதான புகார்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. 

அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் பழைய மெசேஜ்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாக அழிந்து வருவதாக பலர் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து வாட்ஸ்ஆப்பின் பீட்டா தகவல்களை அறிவிக்கும் WaBetaInfo விளக்கம் அளித்துள்ளது. 

அதில், ஒருவர் தனது வாட்ஸ்ஆப் டேடாக்களை பேக்அப் எடுக்கவில்லை என்றால் இது போல தான் அழிந்துவிடும்என்று தெரிவித்துள்ளது. பேக்அப் எடுக்கும் போது அனைத்து தகவல்களும் கூகுள் டிரைவில் பாதுகாக்கப்படும். எனவே வேறு போனுக்கு வாட்ஸ்ஆப்பை மாற்றும் போதும் அனைத்து டேட்டாக்களும் அதில் சேர்ந்துவிடும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close