மற்ற நாடுகளிலும் வாட்ஸ்ஆப்பில் இனி 5 ஃபார்வேர்ட் மெசேஜ் தான்!

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 02:46 pm
whatsapp-limits-message-forwarding-to-combat-fake-news-spreading

வாட்ஸ்ஆப்பில் பரவும் போலி செய்திகளை தடுக்கும் விதத்தில் அந்த நிறுவனம் மிக பெரிய மாற்றம் ஒன்றை சர்வதேச அளவில் கொண்டு வந்துள்ளது. 

இன்றளவில் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறுது. வாட்ஸ்ஆப்பில் இருந்து பரவும் வதந்திகளால் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் 10க்கும் மேற்பட்ட உயிர்களும் பறிபோய் உள்ளன. 

எனவே கடந்த ஜூலை மாதம் வாட்ஸ்ஆப்பில் பரவும் வதந்திகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அந்நிறுவனத்தை வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தது. இதுகுறித்து வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது. அதில், "இந்தியாவை பொறுத்தவரை 20 கோடி மக்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். உலகளவில் இந்தியா தான் அதிகமான புகைப்படங்கள், செய்திகள் என அனைத்தையும் பகிர்ந்துக்கொண்டு இருக்கின்றனர். 

இந்த ஃபார்வேர்டு செய்தியால் ஏற்படும் பல்வேறு குழப்பங்களையும் சிக்கல்களையும் தீர்க்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதன்படி ஒருவர் தனது வாட்ஸ்ஆப் செயலி மூலம் புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள் போன்றவற்றை 5 முறைக்கு மேல் ஃபார்வேர்டு செய்ய முடியாது. 5 முறை முடிந்துவிட்டால், தானாகவே ஃபார்வேர்டு பட்டன் அழிந்துவிடும் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டு, அது சோதனையில் இருக்கிறது. அதை விரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். 

வாட்ஸ்ஆப் என்பது தனிப்பட்டவர்கள் தங்களுக்கு நெருங்கியவர்களுடன் சாட் செய்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு செயலி. வாட்ஸ்ஆப்பில் பாதுகாப்பையும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாக்க கடமைப்பட்டு இருக்கிறோம்" என தெரிவித்திருந்தது. 

பின்னாளில் இந்த முறை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சர்வதேச அளவில் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. 

இதனால் ஒருவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் பேசுவதில் கவனம் செலுத்தி, ஃபார்வேர்டு மெசேஜ்கள் தவிர்ப்பர் என்று வாட்ஸ்ஆப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வதந்திகள் பரவுவதும் குறையும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close