ரூ.4,999-க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவி!

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 01:04 pm
32-inch-smart-android-tv-at-just-rs-4-999

ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன்கூடிய 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை சமி எல்க்ரானிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

"மேக்இன் இந்தியா", "ஸ்டார்ட் அப் இந்தியா" ஆகிய திட்டங்களின்கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிவி ரூ.4,999-க்கே சந்தையில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்த வருவாய் பிரிவினரும் ஸ்மார்ட் டிவி பயன்களை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த டிவி தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் உதிரி பாகங்கள் பெரும்பாலானவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது இதன் தனிச்சிறப்பு எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

512 எம்பி ரேம், 4 ஜிபி அளவுக்கு தகவல் சேமிப்பகம் (Storage), ஃபேஸ்புக், யூடியூப் பயன்பாடு என பல்வேறு வசதிகள் இதில் அடங்கியுள்ளன.

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிவி விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close