ஆப்பிள் போன் பயன்படுத்துவோருக்கு வாட்ஸ்ஆப்பில் புதிய வசதிகள்!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 02:53 pm
whatsapp-introduces-lock-unlock-feature-via-face-id-touch-id-for-ios

பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்காக புதிய சேவை வரயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதில் ஆப்பிள் மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது. இந்த வசதியின் மூலம் ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடி மூலம் வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்ய முடியும். 

இந்த வசதியில் ஐஓஎஸ் வேர்ஷன் 2.19.20 செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த வேர்ஷன் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வாட்ஸ்ஆப் டவுண்லோட் செய்தால் இந்த வசதியை பெறலாம். 

இந்த வசதிகள் விரைவில் ஆண்ராய்டு போன்களுக்கு ஏற்படுத்தி தருவது குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close