விருப்பமில்லாமல் ஒருவரை வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க முடியாது: புதிய அப்டேட்கள்!

  Newstm Desk   | Last Modified : 17 Feb, 2019 12:11 pm
whatsapp-upcoming-features-group-invitation-whatsapp-dark-mode-fingerprint-lock-and-more

வாட்ஸ்ஆப் குரூப் மூலம் பல நன்மைகள் இருந்தாலும் தொடர்ந்து மெசேஜ்கள் வந்துக்கொண்டே இருப்பதால் சிலர் கடுப்பாவதும் உண்டு. இதற்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி ஒன்று வரயிருக்கிறது. 

வாட்ஸ்ஆப் குறித்து தகவல்கள் கூறிவரும் WABetainfo இதுகுறித்து தெரிவித்திருப்பதன்படி இனி வாட்ஸ்ஆப் குரூப்பில் ஒருவரை இணைக்க அவர் விருப்பம் தெரிவிக்க வேண்டுமாம். ஒருவர் குரூப் அட்மினாக இருந்தால் கூட ஒருவரை குரூப்பில் சேர்க்க வேண்டும் என்றால் விருப்பம் இருந்தால் மட்டுமே சேர்க்க முடியும். 

இந்த வசதி WhatsApp Settings > Account > Privacy > Groups என்ற பகுதியில் கொடுக்கப்படும். இதில் Everyone, My Contacts, Nobody என்ற மூன்று தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலமாக ஒரு குரூப்பில் இணைப்பதற்கு யாரெல்லாம் அழைப்பை விடுக்க முடியும் என்பதைத் தேர்வு செய்துகொள்ளலாம். அழைப்பை ஏற்காவிட்டால் 72 மணி நேரங்களில் அழைப்பானது தானாகவே காலாவதியாகிவிடும். இந்த வசதி தற்போது ஐஓஎஸ் பீட்டா வேர்ஷனுக்கு உள்ளது.  அதன் பின்னர் ஆண்ட்ராய்டு பதிப்புக்கும் இந்த வசதி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல கடந்த வாரங்களில் டார்க் மோட், பிங்கர் பிரிண்ட் என பல அப்டேட்களை வாட்ஸ்ஆப் தொடங்கி உள்ளது. 

இதன் வரிசையில் ஆடியோ மெசேஜ் அனுப்புவதற்கு முன்பு அதனை அனுப்புபவர் கேட்டு சரிப்பார்த்துவிட்டு அனுப்பும் வசதி வாட்ஸ்ஆப்பில் வர உள்ளது. மேலும் அடுத்தடுத்து உள்ள ஆடியோ மெசேஜ்களை பிளே பட்டன் அழுத்தாமலேயே கேட்கும் வசதியும் வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது. 

இந்த அப்டேட்களை போல வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பார்ப்பதிலும் மாற்றம் வர உள்ளது. இன்ஸ்டாகிராமில் இருப்பது போல ஒருவரின் சாட் பாக்ஸ்க்கு/ Contactக்கு மேலேயே அவர் ஸ்டேட்டஸ் போட்டிருப்பது தெரியும்படி அப்டேட் வரஉள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close