வாட்ஸ் அப்பில் "பல்க் மெசேஜ்" அனுப்புறவரா நீங்க? அப்போ உங்களுக்கு இருக்கு ஆப்பு!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 09:22 pm
you-may-soon-get-in-trouble-if-you-send-too-many-whatsapp-messages-to-your-contacts

வாட்ஸ்அப் செயலி மூலம் அதிகப்படியான தகவல்களை (Bulk Messages) அனுப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இன்றைய தொழில்நுட்ப உலகில், தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ்-அப் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 25கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம், இச்செயலியின் மூலம் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களும் காட்டுத்தீ போல் வேகமாக பரப்பப்படுகிறது.

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில்தான், வாட்ஸ்-அப் மூலம் ஒரு முறை 5 நபர்களுக்கு அல்லது 5 குழுக்களுக்கு மேல் ஒரு தகவலை பரிமாற்றம் செய்ய முடியாதபடி, கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.

இந்த கட்டுப்பாட்டையும் மீறி, வாட்ஸ் -அப் வசதியை பயன்படுத்தி, அதிகப்படியான நபர்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வோரின் வாட்ஸ் -அப் கணக்கை முடக்கியோ, நீக்கியோ அந்நிறுவனம் தற்போது நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த நிலையில், வாட்ஸ்-அப்பின் தானியங்கி தொழில்நுட்ப வசதி மற்றும் பிற வழிகளில் அளவுக்கு அதிகமான தகவல்களை (Bulk messages) பரிமாற்றம் செய்யும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள்,   அதற்கு உதவியாக இருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 7 -ஆம் தேதி முதல் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close