மேம்படுத்தப்படும் ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ, ரியல்மி எக்ஸ் டி!!!

  அபிநயா   | Last Modified : 24 Nov, 2019 07:23 pm
realme-x2-pro-and-realme-xt-to-soon-be-upgraded-to-coloros-7-beta-confirms-company

நேற்று, சீனாவின் ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ, வரும் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் கலர் ஓஎஸ் 7 பீட்டாவாக மேம்படுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியிருந்ததை தொடர்ந்து, தற்போது, அதன் இந்திய மாடலான ரியல்மி எக்ஸ் டியும் புதுப்பிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரியல்மியின் இந்திய தலைமை நிர்வாகி மாதவ் ஷெத், கூடுதலான அறிவிப்பாக, இந்தியாவில் கலர் ஓஎஸ் 7 வரும் நவம்பர் 25ஆம் தேதி (நாளை) களமிறங்கவிருக்கும் நிலையில், அதற்கு மறுநாள் அதன் மேம்பாடு குறித்த அறிவிப்பையும் வெளியிடப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேம்படுத்தப்படும் ரியல்மி எக்ஸ்2 ப்ரோவின் சிறப்பம்சங்கள் : 

- 6.5 ஹெச்.டி + சிறந்த ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்லே.

- புதுப்பிப்பு வீதம் - 90 ஹெர்ட்ஸ்

- 64 மெகா பிக்சல் சாம்சங் கேமிரா

- 13 மெகா பிக்சல் டெலிபோடோ சென்சார்

- ஆண்ட்ராய்ட் 9 பை + கலர் ஓஎஸ் 6.1

- மிக ஆழமான அகலமான லென்ஸ் ஃ 2 மெகா பிக்சல் ஆழமான சென்சார்.

- 16 மெகா பிக்சல் ஃபரண்ட் கேமிரா 

 இதர சிறப்பம்சங்களாக, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் வசதி, வைஃபை, என்.ஃப்.சி, சுற்றுப்புற ஒளி, ஆக்ஸிலெரோமீட்டர், கைரோஸ்கோப் மற்றும் நியர் சென்சார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close