பட்ஜெட் 2020ல் இவற்றை எதிர்பார்க்கலாம்!

  சாரா   | Last Modified : 01 Feb, 2020 10:13 am
union-budget-2020-expectations

பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் சாமானியர்களுக்கான பட்ஜெட்டாகவும், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையிலும் இருக்கும் என நிதித்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். 

இந்த பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள்: 

தனி நபர் வருமான வரி உச்சவரம்பு மேலும் உயர்த்தப்படலாம். 

மத்திய அரசு, விவசாய கடன் தொகையை, 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் திட்டத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விவசாய கடன் தொகையை தள்ளுபடி செய்யும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லாததால், விவசாய கடன் தொகையை உயர்த்தி, விவசாய நலனில் அக்கறை செலுத்தும் எண்ணம் இருப்பதாக கூறுகிறார்கள்.

இளைஞர்கள் நலன் கருதி, புதிய வேலை வாய்ப்புகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்படலாம். 

நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்களில், உடான் திட்டத்தின் கீழ், விமான சேவை துவங்குவதற்கான அறிவிப்பு இடம் பெறும் என பலமாக நம்பப்படுகிறது. தற்போது, தஞ்சையில் புது விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக வெளியான அறிவிப்பையொட்டி, நாட்டின் சிறு நகரங்களிலும் விமான நிலையங்கள் துவங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், புதிய திட்டங்கள் வெளியாகலாம்.

பாதுகாப்பு துறையில் 1.5 கோடி இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பும் இடம் பெற வாய்ப்புள்ளது. 

சிறு, குறு மற்றும் நடுத்தர பிரிவு தொழில் நிறுவனங்களுக்கு தற்போது வழங்கப்படும் கடன் உதவி மேலும் நீட்டிக்கப்படலாம். 

முத்ரா வங்கிகள் மூலம், சுயவேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான அறிவிப்பு வெளியாகலாம். இதன் மூலம் புதிய தொழில் முனைவோரை உருவாக்கவும், பெண் தொழில் அதிபர்களை உருவாக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது.

விளையாட்டு துறையை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, சர்வதேச அளவில் அவர்கள் சாதிக்கவும், பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கவும் வாய்ப்புள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை பெருக்க புதிய அறிவிப்புகள் வெளியாகலாம். மருத்துவம், ஆராய்ச்சி, உயர் கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு முன்பை விட, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close