இருதுருவங்களின் நட்பு சினிமாவில் மலர்ந்ததா?

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Aug, 2018 11:16 am

friendship-day-movies

நிஜ வாழ்வில் நண்பர்களோ இல்லையோ சினிமாவின் கதாப்பாத்திரங்களுக்காகவும், கதைகளுக்காகவும் நண்பர்களாக மாறியவர்களின் பட்டியலில் ரஜினி, அஜித், விஜய் முதல் விஜய் சேதுபதி வரை உள்ளனர். காந்தத்தின் இரு துருவங்களாக இவர்கள் இருந்தாலும் கதையில் பிரிக்க முடியாத பாலும் நீரும் போன்றே இருந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

தளபதி

1991ம் ஆண்டு நவம்பர் 5 ம் தேதி வெளியான தளபதி திரைப்படம் நட்புக்கு இலக்கண படமாகவே மாறிவிட்டது. மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியும், தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இறங்கி களக்கிய சூப்பர் ஹிட் படம். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி ஹிட் அடித்தது. 

பிதாமகன்

இயக்குநர் பாலா இயக்கத்தில் பிரபல நடிகர்கள் இருவர் இணைந்து சூப்பர் ஹிட் அடித்தப்படம் ‘பிதா மகன்’. 2003 ஆண்டு வெளியான ஒப்படத்தில் சூர்யாவும், விக்ரமும் இணைந்து நடித்திருந்தனர். கதாநாயகிகளுக்கு போட்டி இருக்கோ இல்லையோ தங்களின் திறமைகளை வெளிப்படுத்த போட்டிப்போட்டு நடிக்கும் காட்சிகளே படத்தை வெற்றிப்படமாக்கியது. இவர்களுக்கு ஜோடியாக லைலா, சங்கீதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

ஹே ராம்

ஹே ராம், 2000ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் பிக் பாஸான கமல்ஹாசனும், பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கானும் இணைந்து நடிப்பில் அசத்தி இருந்தனர். சுதந்திர போரட்ட கதையாக இயக்கப்பட்ட இந்த படம் ஆஸ்கார் விருது பரிந்துரைக்கு அனுப்பப்பட்டிருந்தது. நண்பனின் உயிரைக்காக்க கமல் மேற்கொள்ளும் போராட்டம் நெஞ்சை உருக்குவதாக இருக்கும்.

விக்ரம் வேதா

மாதவன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான இப்படம் வசூல் ரீதியில் பிளாக் பஸ்டர்தான்! 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாதவன் ஹீரோவாக நடித்து அசத்தி இருந்தனர். இது குற்றப்பிண்ணனியில் உருவான இப்படத்தில் தாதா கெட்டப்பில் வருகிறார் மக்கள் செல்வன். பல விருதுகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டு விகடன் விருதை பெற்றது. 

ராஜாவின் பார்வையிலே

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் இணைந்து நடித்தத் திரைப்படம் 'ராஜாவின் பார்வையிலே'. இந்தப் படத்தில் விஜய்யின் நண்பன் வேடத்தில் நடிகர் அஜித் நடித்திருப்பார். ஜானகி செளந்தர் இயக்கத்தில் இளையராஜா இசையில் வருடிய ராஜாவின் பார்வையிலே 1994ம் ஆண்டு வெளியானது 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.