இந்திய கிரிக்கெட் நண்பர்கள்! #FriendshipDay

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2018 12:19 pm

greatest-friendships-in-indian-cricket-history

உலகத்தில் எத்தனை உறவுகள் இருந்தாலும் நண்பன் என்னும் ஓர் உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லை. ஃபிரண்ட்ஷிப் என்னும் புனிதமான உறவை கொண்டாடும் நன்னாளான இன்று, அனைவர்க்கும் பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டில் நம்மை போன்று நண்பர்களாக இருக்கும் சில உறவுகளை இங்கு பார்க்கலாம்...

எம்.எஸ். தோனி - சுரேஷ் ரெய்னா:

கிரிக்கெட் வரலாற்றில் ஃபிரண்ட்ஷிப் என்றால் இந்த இணை தான் ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும். ஐ.பி.எல்-ல் சென்னையை மொத்தமாக கட்டிபோட்டவர்கள். கிரிக்கெட் போட்டிகளை விடவும், தனிப்பட்ட முறையிலும் இவர்கள் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். 

விராட் கோலி - கிறிஸ் கெய்ல்:

ஐ.பி.எல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இவர்களது அக்கப்போருக்கு அளவே இருக்காது. இருவரும் இணைந்துவிட்டால் அங்கு கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது. எதிராணிகளாக இருந்தாலும், மனதளவில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். 

சச்சின் டெண்டுல்கர் - ராகுல் ட்ராவிட்:

கிரிக்கெட்டில் ஜாம்பவன்களாக கருதப்படும் சச்சின் - ராகுல், மரியாதைக்குரிய நட்பை வைத்துள்ளனர். இருவரும் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டவர்கள். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை நல்ல முறையில் வழி நடத்தி உயர்ந்தவர்கள். சச்சின் - கம்பளி, சச்சின் - கங்குலியின் உறவும் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதே போல், ட்ராவிட் - அனில் கும்ப்ளே, விவிஎஸ் லட்சுமண் - ட்ராவிட்டின் நட்பும் பேசப்படும்.

விரேந்தர் சேவாக் - கவுதம் கம்பிர்:

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர்கள் சேவாக் மற்றும் கம்பிர். இந்திய அணிக்காக பல வெற்றிகளை குவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இவர்களது ஃபிரண்ட்ஷிப்பும் பேசப்பட்டு வருகிறது.

தோனி - பிராவோ, ரெய்னா - பாப் டு பிளேஸிஸ்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் பழகி வருபவர்கள். இதில் தோனி-பிராவோ உறவு சகோதரர் போன்று என்று பிராவோவே சொல்லி கேட்டிருக்கிறோம். தவிர, ரெய்னா - டு பிளேஸிஸும் நல்ல உறவை தொடர்ந்து வருகின்றனர். 

குமார் சங்ககாரா - மஹேல ஜெயவர்தனே:

இலங்கையின் லெஜெண்ட்கள் சங்ககாரா மற்றும் ஜெயவர்தனே. இலங்கை அணிக்கு இவர்கள் பெரியளவில் பக்கபலமாக இருந்தனர். 

பிரண்டன் மெக்கல்லம் - ஸ்டீபன் பிளெமிங்:

மெக்கல்லம் - பிளெமிங் ஆகிய இரு நியூசிலாந்து வீரர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாக இருந்தவர்கள். இருவரும் இணைந்து நியூசிலாந்து அணி வெற்றிக்காக சிறந்த பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். களத்திற்கு வெளியேவும் சிறந்த நண்பர்களாக இருக்கின்றனர்.

இவர்களை போன்று பல ஃபிரண்ட்ஷிப்கள் கிரிக்கெட் உலகில் தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கின்றது. இவ்வுலகத்தில் ஃபிரண்ட்ஷிப் என்னும் உறவு இல்லாமல் எந்த உறவும் முழுமையடையாது. 

ஃபிரண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்! 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.