நட்பை கொண்டாடும் சிறந்த 8 பாடல்கள்

  கனிமொழி   | Last Modified : 05 Aug, 2018 07:55 am
top-8-songs-to-celebrate-friendship

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் எல்லாரும் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் தமிழ் சினிமா என்றும் அவரகள் நட்பை மகிமை படுத்த மறந்ததில்லை. குழந்தை பருவத்தில் துவங்கி கல்லூரி பருவத்தில் ஏற்படும் நட்பு வரை வழக்கமான சித்தரிப்பை தருகிறது இந்த சினிமா. இன்னும் சில நேரங்களில் நடிப்புக்கு மரியாதையை கொடுக்கும் படி கற்பனை காட்சிகளை கொண்டும் பல நண்பர்களை மகிழ்ச்சியடைய செய்யும். காதல், அன்பு, பாசம் இதையெல்லாம் தாண்டி உள்ள ஒரு பந்தம் தான் நட்பு. இந்த நட்பை கொண்டாடும் வகையில் தமிழ் சினிமா தந்த சிறந்த 8 பாடல்கள் இதோ


'காட்டு குயிலு'


எத்தனை வருடம் ஆனாலும் எத்தனை இளம் இசை அமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜா இசைக்கு ஈடு கொடுக்க முடியாது. அதே போல நட்பு என்று சொன்னதும் எல்லார் மனதிலும் முதலாவதாக வந்து நிற்கும் பாடல் 'காட்டு குயிலு மனுசுக்குள்ள' பாடல் தான். 1991ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி, மமூட்டி இணைந்து நடித்த தளபதி திரைப்படத்தின் பாடல் இது. இந்த பாடல் மட்டும் இல்லை இந்த படமே நட்புக்கு இலக்கணமாய் அமைந்தது. இன்னும் 100 வருடங்கள் கடந்தாலும் இந்த பாடலின் அழகு சிறு அளவும் குறையாது.


'முஸ்தபா முஸ்தபா'


அபாஸ், வினீத், தபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் காதலர் தேசம்.1996ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்திற்கு இசை அமைத்தார் ஏ.ஆர் ரஹ்மான். முஸ்தபா முஸ்தபா பாடலை கேட்டு இன்றும் கண்ணீர் வடிக்கும் பல நண்பர்கள் உண்டு.கல்லூரி, ஆண்களின் நட்பை சிறப்பாக இந்த பாடல் வரிகள் எடுத்து காட்டியிட்டிருக்கும்.

'தோழா தோழா'


இந்த சமூகத்தில் ஆணும் பெண்ணும் பழகினால் அது காதல் தான் என்ற எண்ணத்தை உடைத்து போட்ட பாடல் தான் தோழா தோழா தோல் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும். 2001ம் ஆண்டில் வெளிவந்த பாண்டவர் பூமி படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார் பரத்வாஜ். இந்த பாடல் வரிகளை ரசித்து அழகாக எழுதியவர் யார் தெரியுமா? நம்ம பிக்பாஸ் புகழ் கட்டிப்புடி சினேகன் தான்.


'தேவதை வம்சம் நீயோ'


ஹாஸ்டலில் தங்கி படிக்கும் தன் தோழியை ஒரு தாயின் இடத்தில இருந்து பாசம் காட்டும் நட்பை உணர்த்தும் படம் ஜோதிகா நடித்துள்ள ஸ்நேகிதியே. சுட்டி தனமாக  இருக்கும் ஜோதிகாவை அவளுக்கு எல்லாமுமாய் இருந்து பார்த்துக்கொள்ளும் அவர் தோழியின் நட்பை வெளிப்படுத்தும் பாடல் தான் 'தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ'. இந்த பாடலுக்கு இசை அமித்துளார் வித்யாசாகர். இரு பெண்களுக்கு இடையே உள்ள நட்பை இதை விட சிறப்பாக இன்று வரை தமிழ் சினிமாவில் எந்த இயக்குனர்களும் சித்தரிக்கவில்லை.


'மனசே மனசே'


2002ம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில்  திரைப்படத்த்திற்கு இன்றும் ரசிகர்கள் உண்டு. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பிரியப்போகும் நண்பர்களின் கஷ்டத்தையும் அன்பையும் தெரிவிக்கும் பாடல் 'மனசே மனசே மனசில் பாரம்'. இன்றும் கல்லூரி விழாக்களில் இந்த பாடலை கேட்டு கண்ணீர் வடிக்கும் மாணவர்கள் பலர். இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார் எஸ்.எஸ் ஸ்டான்லி.

'என் ஃபிரென்ட போல யாரு மச்சான்'


என்னதான் நண்பன் தவறு செய்திருந்தாலும் அவனை விட்டுக்கொடுக்கால் வாழ்க்கையில் சாதிக்க தட்டிக்கொடுக்கும் நட்புக்கு எடுத்துக்காட்டான படம் தான் விஜய் நடித்த நண்பன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளிவந்த பாடல் 'என் ஃபிரென்ட போல யாரு மச்சான்' பாடல் இன்றும் பல நண்பர்களின்  ரிங்க்டோனாக உள்ளது. ட்ரெண்டிங் ஆனா நட்பு பாடல்களில் இதுவும் ஒன்று.


'நண்பனை பார்த்த தேதி மட்டும்'


கல்லூரி வாழ்வில் நடக்கும் கசப்பான,சந்தோஷமான சம்பவங்கள் எல்லாவற்றையும் சித்தரிக்கும் படம் தான் 2009ம் ஆண்டில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'நினைத்தாலே இன்னிக்கும்'. விஜய் ஆன்டனி இசையில் 'நண்பனை பார்த்த தேதி மட்டும்' பாடல் எல்லா இளைஞர்களாலும் இன்றும் விரும்பப்படும் பாடல். கல்லூரி படிப்பை முடித்து நண்பனை பிரியும் சோகத்தை அழகாய் வெளிப்படுத்துகிறது இந்த பாடல்.

'ஒரு நண்பன் இருந்தால்'


காதலையும் நட்பையும் சமமாக காட்டிய படம் தான் திரிஷா ஸ்ரேயா ஆகியோர் நடித்த எனக்கு 20 உனக்கு 18. இந்த படத்தின் பாடல்களை இசை அமைத்துள்ளார் இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான். 'ஒரு நண்பன் இருந்தால் கையோடு பூமியை சுழற்றிடலாம்' என வரும் இந்த பாடல் வரிகள் நட்புக்கு கொடுக்கும் மரியாதையும் நண்பன் மீது வைக்கும் நம்பிக்கையும் எடுத்துக்காட்டுகிறது.

இதைப்படிச்சீங்களா?

கிரிக்கெட் நண்பர்கள்! #FriendshipDay

தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close