சென்னையில ஃப்ரண்ட்ஸ் கூட போக வேண்டிய ட்ரெண்டிங்கான 5 இடங்கள்!

  முத்துமாரி   | Last Modified : 04 Aug, 2018 07:21 pm
friendship-day-special-best-entertainment-places-in-chennai

இந்த வருஷம் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை..அதாங்க நண்பர்கள் தினம்...ஆகஸ்ட் 5ம் தேதி வருது...சரி இந்த ஃப்ரண்ட்ஷிப் டே- க்கு சென்னையில எந்த இடத்துக்கு போலாம்னு தான யோசிக்குறீங்களா... சென்னைல பெஸ்ட் & ட்ரெண்டிங்கான சில இடங்கள்...  

வி.ஜி.பி ஸ்நோ கிங்டோம்(VGP SnowKingdom)

இசிஆர் ரோட்டுல இருக்குற விஜிபி சென்னைல பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியும்..இங்க சமீபத்துல  'ஸ்நோ  கிங்டோம்' னு புதுசா ஒன்னு ஸ்டார்ட் பண்ணிருக்காங்க... நாம சென்னை வெயில்ல அலைஞ்சுட்டு தினமும் ஒரு பரபரப்போட தான் சுத்திட்ருக்கோம். அதெல்லாம் மறக்கும்படியா ஃப்ரண்ட்ஸ் கூட அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வந்தீங்கன்னா, எதோ ஸ்விட்சர்லாந்து போன ஃபீல் கிடைக்கும்னு போனவங்க சொல்றாங்க.. 

ட்ரேம்போலின்(Trampoline) 

இப்போ இருக்குற இளைஞர்கள் மத்தியில பெஸ்ட் ட்ரெண்டிங்கான இடம்னா அது ட்ராம்போலின் பார்க்குனு சொல்றாங்க...அடிக்கடி போகுற ஒரு இடமும் இதுதானாம்..காதர் நவாஸ் கான் ரோடு, ஆயிரம் விளக்கு மேற்கு பகுதியில இருக்கு இந்த இடம்... 

ஃபங்கீ ஜம்ப்பிங்(Bungee Jumping)

இசிஆர் ரோட்டுல இருக்குற இன்னொரு முக்கியமான இடம் தான் இந்த  ஃபங்கீ ஜம்ப்பிங்.. ஒரு த்ரில் & இன்ட்ரெஸ்டிங் அனுபவமாக இருக்கும். தரையில இருந்து 30 அடி தூரம் வரைக்கும் நீங்கள் பறக்கலாம்... எல்லாவித பாதுகாப்பு அம்சங்களும் இருக்கு...அதுனால நீங்க பயப்பட தேவையில்லை. அதுமட்டுமில்லாம Gunshoot, chain wheel riding னு ஏகப்பட்ட ஆக்டிவிட்டீஸ் இருக்கு.. 

சோப் ஃபுட்பால் (soap football)

அதென்ன  சோப் ஃபுட்பால்... சோப்பு நுரையோட இருக்குற தண்ணிக்குள்ள  ஃபுட்பால் விளையாடலாம்... நம்ம கேங்ல ஃபுட்பால் நலம் விரும்பிகள் இருந்தா எல்லாரும் சேர்ந்து இந்த இடத்துக்கு போயிட்டு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரலாம்.. இசிஆர் நெமிலி பக்கத்தில இந்த இடம் இருக்கு.. சான்ஸ் கிடைச்சா ஃபுட்பால் விளையாடுறவங்க கண்டிப்பா போயிட்டு வாங்க.. மறக்க முடியாத ஒரு அனுபவமா இருக்கும்..

முட்டுக்காடு(Muttukadu)

இசிஆர் ரோட்டுல இருக்குற ஒரு கூலான பிலேஸ்... போட்டிங்-க்கு ஒரு சூப்பரான இடம்(boating).. அதே மாதிரி மற்ற இடங்களை ஒப்பிடுறப்ப ரொம்ப கம்மியான செலவு தான் ஆகும். சென்னையில அடிக்கிற வெயிலுக்கு  ஜில்லுனு ஒரு ரைடு போலாமே....

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close