இத்தனை வகையான ஃபிரண்டஸா ?

  கனிமொழி   | Last Modified : 04 Aug, 2018 06:48 pm
different-types-of-friends

தாயாக அன்பையும் தந்தையாக நற்பண்பையும் ஆசானாய் அறிவையும் விதைத்திடும் உறவுக்கு பெயர் தான் நட்பு. நட்புக்கு பல வடிவங்களில் அர்த்தம் கற்பிக்கலாம். 'உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்' என்ற பழமொழிக்கேற்ப நம் குணத்தை அறிய நம் நண்பர்களின் குணம் அறிந்தால் போதும். 'நண்பன்ல ஏதுமா நல்ல நண்பன், கேட்ட நண்பன். நண்பன் நாலே நல்லவன் தான்' இது இப்போ ட்ரெண்டிங் நட்பின் புதுமொழி என்று சொல்லலாம்.

தன் நண்பன் தவறு செய்தாலும் அவனை விட்டுக்கொடுக்காமல் அவன் வாழ்வில் முன்னேறி வருவதற்கு தட்டிக்கொடுப்பவனே உண்மையான தோழன். நம் வாழ்வின் ஒவ்வொரு பருவத்தில் புது புது நண்பர்களை சிந்திப்போம். அப்படி சந்திக்கும் நண்பர்களின் இயல்பு குணம் ஒரே மாதிரி இல்லாமல் கண்டிப்பாக வேறுபாடும். ஒவ்வொரு நண்பர் குழுவில் இருக்கும் வித்தியாசமான குணம் கொண்ட நண்பர்கள் பற்றி பார்ப்போம்.

ஆல்வேஸ் லேட்
எல்லோர் நண்பர் குழுவிலும் எப்பொழுதும் லேட்டா வருகிற ஒரு நபர் கண்டிப்பாக இருப்பது உண்டு. ஒவ்வொரு முறையும் "சாரி மச்சான் அடுத்தவாட்டி இப்படி நடக்காது பாரேன்" என்று சொல்லுவான். ஆனால் ஒவ்வொரு முறையும் தாமதாக தான் வருவான், அவனை திட்டியே நாம் சலித்து விடுவோம்.

செல்ஃபி பைத்தியம்
"யார் என்ன வேணாலும் பண்ணிக்கோங்க நான் செலஃபீ எடுத்துட்டே தான் இருப்பேன்" என்ற குணம் படைத்த நண்பர் அடுத்த வகை. நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து வெளிய போகலாம் என்று யோசிக்க ஆரம்பித்ததிலிருந்து அவர்கள் வீடு திரும்பும் தருணம் வரை ஒன்று விடாமல் செலஃபீ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிடுவார்கள். சில நேரங்களில் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் நேரத்திலும் 'எங்கள் முதல் சண்டை' என்று பதிவிடும் சில க்ரேஸி நண்பர்களும் உண்டு.

நாட்டாமை ஃபிரண்ட்
அவர் வேலைகளை பார்ப்பதை விட, யார் சண்டைபோட்டுக்கொண்டாலும் சமாதான படுத்த ஓடிவிடுவார். நண்பர் குழுவில் பிறர் சண்டை போட்டு கொண்டிருக்கும் போது நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் பாவப்பட்ட நபர் இவர் தான்.

சாப்பாட்டு ராமன்
எல்லா நண்பர் குழுவிலும் கண்டிப்பாக இந்த குணம் படைத்த நபர் இருப்பது உறுதி. சாப்பாடிற்காக சண்டை போடுவது அழுவது போன்ற குழந்தை தனமான செயல்களை இவர்களால் மட்டுமே செய்ய கூடும். சாப்பாடு இருந்து விட்டால் போதும் வேற எதுவும் தேவை இல்லை என்று ஜாலியாக நண்பர்களோடு இருக்கும் நேரத்தை கொண்டாடுவர்.

நான் ஸ்டாப் ரேடியோ
சொன்ன கதையையே திரும்ப திரும்ப சொல்லும் குணம் படைத்தவர்கள் இவர். நண்பர்களுக்கு பேச இடைவெளி கொடுக்காமல் இவரே முழு நேரம் பேசிக்கொண்டே இருப்பார். அதை கேக்கும் நமக்கு அவரை பளார்ன்னு அடிக்கணும் போல தோணும் ஆனா என்ன பண்றது நட்புன்னு வந்துட்டா இதை எல்லாம் தாங்கி கொள்ள தான வேண்டும்.

இது போல வித்தியாசமான குணம் கொண்ட பல நண்பர்கள் இருப்பார்கள். அந்த நண்பர்களுக்கு எப்போதும் உண்மையாக இருப்பதே நட்புக்கு அழகு. கர்ணன் துரியோதரனை போல நட்புக்கு எடுத்துக்காட்டாய் இருக்க முயற்சி செய்யும் அனைத்து நண்பர்களுக்கும் , இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close