புத்தியுள்ளவன் பலவான்

  கோமதி   | Last Modified : 29 May, 2018 12:02 pm


அரசன், ஒருவனுக்கு திடீரென்று ஒரு வினோதமான எண்ணம் தோன்றியது.தான்  வாழ்க்கையில் அதுவரை கண்ணால் பார்த்தே இராத  பழம் ஒன்றை,தனது பிரஜைகளில் யார் ஒருவர்  கொண்டு வந்து தருகிறார்களோ,அவர்களுக்கு தனது நாட்டிலுள்ள ஒரு ஊரை பரிசாக தருவதாகப் பறை சாற்றினான்.

இதைக் கேள்விப்பட்டதும்,ஆயிரக்கணக்கானோர் அரசனுடைய மாளிகைக்கு வெளியே வரிசையில் வந்து நின்றனர்.இந்தக் கூட்டத்தை எதிர்பார்க்காத அரசன் தனது முடிவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தான். அதாவது, அப்பழத்தை தான் ஏற்கனவே பார்த்திருந்தால் அதனை கொண்டு வந்தவர்களே அதனை முழுதாக விழுங்க வேண்டும் என்பதாகும் .

இதை கேட்டவுடன் வரிசையில் நின்ற பலர் காணாமல் போயினர். மற்றவர்கள் தைரியமாக வரிசையில் நின்றனர்.

ஒருவர் தேசிக்காயை அரசனுக்கு காட்டினார் . அரசன் அதை பார்த்துள்ளதாக கூறினான். மனமுடைந்த அவர் அரசன் ஆணைப்படி அந்த தேசிக்காயை முழுதாக விழுங்கினார்.

அடுத்து விளாம்பளம் கொண்டு வந்தவரும் கஷ்டத்துடன் அந்த விளாம்பழத்தை முழுதாக விழுங்கினார்.

பின்னால் வந்த இளைஞன் அன்னாசிப்பழம் ஒன்றை கையில் ஏந்தியவண்ணம் அரசனைப் பார்த்து தலைவணங்கி பரிசைக் கேட்டான்.அரசன் கோபத்துடன் அப்பழத்தை ஏற்கெனவே பார்த்துள்ளதாகக் கூறி அதனை விழுங்க சொன்னான்.

அன்னாசிப்பழம் கொண்டு வந்தவன் அதை விழுங்குவதும் பின்னர் அதனை வெளியே எடுத்து சிரிப்பதுவுமாக இருந்தான்.அவன் வாயெல்லாம் ரத்தம் ஓடியது. அப்படியும் அவன் சிரிப்பை நிறுத்தவில்லை. அரசன் காரணம் புரியாமல், பயங்கர கோபத்துடன், "ஏன் இப்படி சிரிக்கிறாய்?" என்று கேட்டான் .

அதற்கு அன்னாசிப்பழம் கொண்டு வந்தவன் சொன்னான், "அரசே! நான் இந்த அன்னாசிப்பழத்துடன் இந்த கஷ்டப்படுகிறேனே. பின்னால் ஒருவன் பலாப்பழத்துடன் நிற்கிறான். அவன் அதனை எப்படி விழுங்கப்போகிறான் என்பதை நினைக்கும் போது இந்த கஷ்டத்திலும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை." என்றான்.

அரசன் உடனடியாக பலாப்பழத்துடன் நிற்பவனை உள்ளே வரச்சொல்லி ஆணையிட்டான்.

அவனோ எமகாதகன், மகா புத்திசாலி. அன்னாசிப்பழத்துடன் முன்னே போனவன் படும்பாட்டை  கேள்விப்பட்டு உடனடியாக பழத்தை வெட்டி அதிலொரு சுளையை மட்டும் எடுத்துக்கொண்டு அரசன் முன் வந்து நின்றான்.

அரசன் தான் அப்பழத்தை பார்த்துள்ளதாகக் கூறினாலும் அவனது புத்தி சாதுரியத்தை பாராட்டி தான் சொன்னபடி தனது பரிசை அவனுக்கு வழங்கினான்.

புத்தியுள்ளவன் பலவான் என்பார்கள். வாழ்வில் எத்தகைய சூழ்நிலையிலும் தடுமாறாமல் புத்தியை தீட்டினால் வெற்றி நிச்சயம். தம்மை நோக்கி வரும் பாதகமான சூழலையும் புத்தியுள்ளவர்கள் சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். தெளிந்த சிந்தனையோடு இன்றைய நாளை துவங்குவோம். மேலும் பல நிகழ்வுகளை தெரிந்துக்கொள்ள இணைந்திருங்கள் : http://www.newstm.in


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close