ஆரோக்கிய சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்!

  Shalini   | Last Modified : 04 Sep, 2018 02:54 pm

article-on-teacher-s-day

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தெய்வத்துக்கு முன்பாகப் போற்றப் படுபவர்கள் ஆசிரியர்கள். இன்னும் கூட ஆழ்ந்து யோசித்தால், பெற்றோரை விட அதிக பங்கு அவர்களுக்குத் தான் உண்டு. பாடத்தைக் கற்பிப்பவர் ஆசிரியர் என்ற புரிதலோடு நீங்கள் இருந்தால் அது முற்றிலும் தவறு. அவர்கள் நாம் மதிப்பெண் வாங்குவதற்காக பாடம் நடத்துபவர்களில்லை. சமூகத்தில் நம் மதிப்பை உயர்த்துவதற்காக பாடுபடுபவர்கள். 

காலை 9 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை சராசரியாக 3 வயதிலிருந்து 22 வயது வரை பல மாணவர்களின் படிப்பைப் பொறுத்து ஆசிரியர்களின் பங்கு அதிகம். படிப்பு சுமாராகத் தான் வரும். ஆசிரியர்களுக்கு வேண்டிய முக்கிய குணம் கனிவு. எதையும் ஸ்ட்ரிக்டாக சொன்னால் நம் மூளை அதை ஏற்றுக் கொள்ளாது. அதானால் அவரவர்களுக்கு  எப்படி சொன்னால் புரியுமோ அப்படியெல்லாம் சொல்ல வேண்டிய கடமை ஆசிரியருக்கு இருக்கிறது. படித்து முடித்து நாம் எவ்வளவு பெரிய அதிகாரியாகவும் ஆகலாம், அப்படி அதிகாரத்துக்கு வந்ததும் நாம் போடும் கையெழுத்தைப் போட கற்றுக் கொடுத்தவர் ஆசிரியர். 

மருத்துவர்கள், இஞ்சினியர்கள், அரசு அலுவலர்கள், என வருடந்தோறும் ஆயிரக் கணக்கான குழந்தைகளை பிரசவிப்பது ஆசிரியர்கள் தான். பொதுவாக எல்லோருக்கும் ஒரு ஆசிரியர் தங்களின் ஹீரோவாக, ரோல் மாடலாக இருப்பார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் நாம் தட்டாமல் கேட்போம். அவரின் பாடத்தில் மட்டும் அதிக மதிப்பெண் வாங்குவோம். 

மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். ஆனால் ஆசிரியருக்கோ, மாணவர்கள் ஒவ்வொருவரின் உள் வாங்கும் திறனைப் பொறுத்து வித விதமானவர்கள். இப்படி அவர்களின் அனுபவத்தில் ஆயிரக் கணக்கான மாணவர்களை ஆண்டுதோறும் உருவாக்குகிறார்கள். 

ஆசிரியர்களுக்கு தேவையான ஒன்று, கற்பித்தல் மீதுள்ள காதல். அது அதிகரிக்க அதிகரிக்கத் தான். மாணவர்களுக்குப் புரியும் படி கற்பிக்க முடியும். வெறும் மாணவர்கள் என்ற பார்வையை விடுத்து, தன் குழந்தையைப் போல் பார்த்துக் கொள்ளும் அவசியம். எப்போது எக்ஸ்ட்ரா கேரை மாணவர்கள் விரும்புவார்கள். அதனால் அவர்கள் இன்னும் அதிகமாக சிறந்து விளங்க முடியும். எல்லா மாணவனும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அதனால் அவரவர் திறமை வெளியே தெரிந்தால், அதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, தொடர்ந்து ஊக்கப் படுத்துவது ஆசிரியரின் கடமை. 

அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதிலும் பிரச்னைகள், அழுத்தங்கள், கடமைகள் என எல்லாம் இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் மறைத்து, இன்முகத்துடன் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள். 

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.