பாரதியும்... பெண்மையும்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Sep, 2018 12:44 pm

subramanya-bharati-s-vision-of-woman

பெண்களுக்கு சுதந்திர வேட்கையை தூண்டி, பெண்கள் சிறகடித்து வானில் பறக்க உருவாக்கப்பட்டவர்களே!, பெண்களுக்கு கல்வி உரிமை வேண்டும் என பல கோஷங்களை எழுப்பிய முக்கியமான தலைவர் முண்டாசு கவிஞன் பாரதியார். தான் சமூகத்திற்கு கூறவரும் அனைத்து கருத்துகளையும் எழுத்துகளாலும், கவிதையாலும் தீ பறக்கும் கருத்துகளை பெண்கள் மனதில் பதித்தவர். 

"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர் பாரதி. பெண்களை மதிக்க தெரிந்த பாரதி நாட்டின் பெரிய சக்தியாகவே பெண்களை பார்த்தார். அவருடைய வசனங்களே பெண்களை தட்டியெழுப்பி தங்களது உரிமைக்கு போராட வைத்தது. பெண் வீட்டை விட்டு வெளியேற முடியா? கல்வி கற்க முடியுமா? என்ற நிலையை மாற்றியவர் பாரதி. "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்... பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என கவிதைகளால் வசைப்பாடினார்.

பெண்ணடிமைத்தனம் என்பது நாட்டிற்கே அடிமைத்தனம் என எச்சரித்த பாரதி, தேசிய விடுதலை இயக்கம் மூலம் விடுதலை போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பை இடம்பெறச் செய்தார். “பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால்... பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை” என்ற வரிகள் ஒவ்வொரு ஆண்களையும் சிந்திக்க வைத்தது. 

பெண்களுக்கு வெறும் கல்வி உரிமையும், எழுத்துரிமையும் மட்டும் கொடுத்துவிட்டால் போதாது. பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்ய கூடாது, அரசியல் உரிமை வேண்டும், சொத்தில் சம உரிமை வேண்டும், திருமணமின்றி வாழும் உரிமை உண்டு, வேலைக்கு செல்ல உரிமை உண்டு என பெண்களின் அத்தியாவசிய உரிமைகளுக்காக போராடிய தீர்க்க தரிசி தான் பாரதியார். 

பெண் என்பவள் யாருக்கும் அடிமை இல்லை. சமூகத்தில் தலை நிமிர்ந்து ஒளிரும் மிகப்பெரும் ஜோதி என கூக்குரலிட்டார். “பெண்மை வாழ்கவென்று கூத்திடு வோமடா... பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா” என பெண்மையின் பெருமையை அழகாக எடுத்துரைத்தார். 

இன்றைக்கு பெண்ணினத்திற்காகப் பேசி வரும் இலக்கியவாதிகளும் இலக்கியமும் தன் கையைக் கொண்டே பெண் கண்ணைக் குத்தும் வேலையை மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கின்றனர். 33% இடஒதுக்கீடு அளித்துவிட்ட போதிலும் ஒரு நாளை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் எங்கோ ஒரு மூலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  உண்மையில் பெண் சுதந்திரம் கிடைத்ததா? அல்லது பெண் சுதந்திரம் எல்லை மீறியதால் இத்தகைய கொடுமைகள் அரங்கேறி வருகின்றனவா? என்பதுதான் கேள்விக்குறியாகவுள்ளாது.

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்” 

ஆண் கல்வி கற்றால், அது குடும்பத்திற்கு மட்டும் பயன் தரும் ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் குடும்பம், நாட்டிற்கும் பயன்தரும் என அடுக்காக வசன மொழி பேசும் தலைவர்களும், பெண்கள் என்பவள் திருமணம் ஆகும் வரை தந்தை சொல் கேட்கிறவளாகவும், திருமணத்திற்கு பின் கணவனுக்கு அடிமையாகவும் இருக்க வேண்டும் என்ற நிலைமை இப்போது இருந்தாலும் அதனை ஓரள்வுக்கு மாற்ற அந்த காலத்திலேயே குரல் கொடுத்தவர் பாரதி என்றால் மிகையாகாது!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.