இரும்பு மனிதருக்கு உலகின் உயரமான சிலை!

  PADMA PRIYA   | Last Modified : 30 Oct, 2018 05:08 pm

meet-the-man-who-sculpted-sardar-vallabhbhai-patel-s-statue-of-unity

குஜராத்தில் 'ஒருமைப்பாட்டு சிலை' என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் திருவுருவச் சிலையை பிரதமர் மோடி இன்று அக்டோபர் 31ம் தேதி திறந்துவைக்கிறார்.   2989 கோடி செலவில் கிழக்கு குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையை ஒட்டிய நர்மதா நதியின் குறுக்கே ஒருமித்த இந்தியாவை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் பட்டேலுக்கு 597 அடி (182 மீட்டர் ) அடி உயரத்தில் சிலை அமைத்து கம்பீரமாக திறந்திட அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன.

கடந்த 2013-ம் ஆண்டு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இந்தச் சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.  இதற்கு `ஒருமைப்பாட்டு சிலை' (STATUE OF UNITY) எனப் பெயர் வைக்கப்பட்டது.  பிரதமர் மோடியின் கனவுத்திட்டமான இந்த சிலை நாளை கோலாகலமாக திறந்துவைக்கப்பட உள்ளது. உலகிலேயே மிக உயரமான சிலை என்கிற பெருமையை இந்த படேல் சிலை பெறப்போகிறது.

 குஜராத்தின் சாது பெட் தீவில் சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 250க்கும் மேலான பொறியாளர்கள் சிலை வடிவமைக்கும் பணியிலும் 3400 தொழிலாளர்கள் சிலை அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். முக்கியமாக இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வெண்கல சிலைக்கு புகழ்பெற்ற சிற்பி ராம் வி சதர் வடிவம் கொடுத்துள்ளார்.  

சிற்பி ராம் வி சுதர் குறித்து....

டெல்லியைச் சேர்ந்த சிற்பி ராம் வி சுதர் பல பாரம்பரிய சிறப்பு வாய்ந்த சிலைகளை வடிவமைத்து வரலாற்றில் தவிர்க்க முடியாத சிற்பியாக திகழ்கிறார். 

'ஒருமைப்பாட்டு சிலை'  முதலில் 30 அடி உயரத்தில் வெண்கல மாடலாக சிற்பி ராம் வி சுதரால் வடிவமைக்கப்பட்டது. பின்னர் அதனைக் கொண்டு முழுமையான 597 அடி உயர வெண்கல சிலை  42 மாதங்கள் கால அளவில் தயாரிக்கப்பட்டது.

சிலை வடிவமைப்பில் உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா-வை கட்டிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

ராம் வாஞ்சி சுதர், உலகளாவிய சிலை வடிவமைப்புக் கலையை புகுத்தி சுமார் 50 கல்வெட்டு சிலைகளுக்கு நிகரான வேலைப்பாடுகளுடன் இதனை வடிவமைத்துள்ளார்.  ராம் வி சுதர் 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுபெற்றவர் ஆவார். தொடர்ந்து பல விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றுள்ளார். சமீபத்தில் 2016ஆம் ஆண்டு இவருக்கு தாகூர் விருது வழங்கப்பட்டது. 

ராம் வி சுதரின் இதர கைவண்ணம் 

சிற்பி சுதரின் நீண்ட கால சிலை வடிவமைப்பு பயணம் 1999களில் தொடங்கியது. அப்போது தொடங்கி அவர் நம் நாட்டில் மிக முக்கிய சிலைகளை வடிவமைத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் காந்தி சாகர் அணைக்கட்டில் உள்ள சம்பல் நினைவுச்சின்னம் இவர் வடிவமைத்தது. ஒரே கல்லில் 45அடி உயர தாயும் இருப் பிள்ளைகளும் இருப்பது போலான கம்பீரமான சிலை இன்றளவும் குறிப்பிடத் தகுந்தவை.  

அப்போது இதன் பிரசித்தி தன்மையை கண்டு வியந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பாக்ரா அணையில், தொழிலாளர் சிலையை வடிவமைக்க சுதரை தானே நியமித்தார். தொழிலாளர்களின் வெற்றியைப் போற்றும் மே தினத்தின் சிறப்பை உணர்த்தும் சிலையாக கம்பீரமாக 1959ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று திறந்து வைக்கப்பட்டது. இது போல 50க்கும் அதிகமான பிரதானமாக புகழ்பெற்ற சிலைகளில் ராம் சுதரின் கைவண்ணம் உள்ளது. 

இதைத் தவிர, அஜந்தா எல்லோரா குகைகளில் பாரம்பரிய சிற்பங்களை மறுசீரமைக்கும் பணிகளிலும் ராம் வி சுதர் ஈடுபட்டவர் ஆவார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பணிகளை மேற்கொண்டுள்ள சுதர் பள்ளிப் படிப்பைத் துறந்து சிற்ப வடிவமைப்பை தன்னிச்சையாக முன்வைந்து பயின்றவர். 

பின்னர் இவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் பணிபுரிய வாய்ப்பு அமைந்தது. அதில் திருப்தி காணாத சுதர், மீண்டும் சிலை வடிவமைப்பு வேலைகளில் இறங்கினார்.  2004, இவரது ஓவிய அரை சாஹிபாபாதில் திறந்துவைக்கப்பட்டது. 

காந்தியின் உருவமே பிரதான 'மாடல்'

சுதர் தனக்கு மிகவும் நெருக்கமான, வடிவமைக்க ஏதுவான முகம் என்றால் அது காந்தியின் முகம் தான் என்று குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் முகத்தை தான் அதிக முறை வடிவமைத்துள்ளதாக பெருமிதம் கொண்டார். இது குறித்து ஒரு  நிகழ்ச்சியில் பகிர்ந்த சுதர், தான் சுதேசி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் 
அப்போது தவறுதலாக தான் 'விதேசி' தொப்பியை அந்தப் போராட்டத்துக்கு அணிந்து சென்றதாகவும், அப்போது அங்கிருந்தவர்கள், காந்தி வருவதாக கூறி அதனை தூக்கி வீச கூறியபோது அங்கு கொழுந்து விட்டு எரிந்த  நெருப்புக்கு பின் வந்த மகாத்மா காந்தியின் முகத்தை தன்னால் மறக்க முடியாது என்றும் நினைவுகூர்ந்துள்ளார். 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.