இந்தியாவில் வாழ்வுகாணும் புலம்பெயர்ந்த பாகிஸ்தானிய இந்துக்கள்

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 12:58 pm

we-had-to-face-the-consequences-of-being-hindu-i-don-t-want-to-go-back-to-pakistan-sad-story-of-a-hindu-girl

பிறந்து வளர்ந்த சொந்த நாட்டில் உரிமையும் அடிப்படை வாழ்க்கையும் கிடைக்காமல் கொத்தடிமைகளுக்கும் கீழ் நிலையில் வாழ்வது எவ்வளவு கொடியது. அத்தகைய நிலையில் பெண்களும் சிறுமிகளும் இருந்தால் அவர்களது வாழ்க்கை இன்னும் மோசமான சொல்லில் அடங்காதவையாக இருக்கும். 

இத்தகையை சூழல்களில் இருந்து மீண்டு டெல்லியின் ஓரம் பாகிஸ்தானிய இந்துக்கள் கொத்துக்கொத்தாக  வாழ்கின்றனர். டெல்லியின் சத்தர்பூரில் உள்ள சஞ்ஜய் காலனியில் முழுமையாக கட்டப்படாத, ஒன்றும் பாதியுமாக கற்கள் அடுக்கப்பட்ட சுவர்களுக்கு இடையே அதனையே தங்களது சொர்க்க வீடுகளாக எண்ணி அம்மக்கள் வாழ்கின்றனர். அடிப்படை வசதிகள், சாலைகள், சுத்தமான தண்ணீர் இல்லாத ஒரு இடத்தில் வாழ்ந்தாக வேண்டிய சூழலுக்கு அவர்களது நாடே அவர்களை தள்ளியுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. 

அங்கு இந்தியத் தரப்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மறுவாழ்வு முகாமில் வாழும் சிறுமி ஒருவர் தனது நிலைக் குறித்து குறிப்பிடுகிறார். எனது படிப்பு 8ஆம் வகுப்போடு நிறுத்தப்பட்டது. பின்பு இந்தியாவுக்கு வந்துவிட்டோம். இங்கு உள்ள பள்ளிகளில் சேர என்னிடம் சரியான அடையாள அட்டை இல்லை. ஆனால் இது தான் என் சொந்த நாடு என்று தோன்றுகிறது. எனக்கு வீடு இங்கு தான் உள்ளது. இங்கு சூழல்களிலும் நான் நிம்மதியாக வாழ்கிறேன். 

பாகிஸ்தானில் எங்களை கல்மா, குரான் போன்றவற்றைகளை படிக்க பள்ளிகளில் வற்புறுத்துவார்கள். அப்படி செய்ய மறுத்தால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். எனது மத நம்பிக்கைகளை பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். இந்துக்களாக இருக்கும் ஒரே காரணத்துக்காக எங்களை பலவகைகளில் அச்சுறுத்துவார்கள். அங்கு உள்ள பள்ளிகளில் இந்துக்கள் தண்ணீர் கூட குடிக்கக் கூடாது. எனெனில் அவர்களது பிள்ளைகள் பருகும் தண்ணீர் அது என்பதால். தண்ணீர் எப்போதும் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றாக வேண்டும். அங்கு எங்களுக்கு சுதந்திரமே இருந்ததில்லை. இங்கு நான் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இனி ஒருமுறை எனக்கு பாகிஸ்தான் செல்ல வேண்டும்'' என்கிறார் புலம்பெயர்ந்த பாகிஸ்தான் இந்துக்கள் வசிப்பிடத்தில் வாழும் கவிதா என்ற சிறுமி. 

பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொருவர் கூறுகையில், ''நான் எனது 40 ஆண்டு கால வாழ்க்கையை அடிமையாக கழித்தேன். நான் சிந்து மாகாணத்தில் எனது குடும்பத்துடன் வாழ்ந்தேன். அங்கு இந்துக்களுக்கு மரியாதையே இல்லை. அவர்கள் எங்களை கருப்பர்கள் என்று தான் அழைப்பார்கள். எதற்காக எனது மூதாதையர்கள் அந்த நாட்டில் வாழ்ந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அங்கு நாங்கள் இரண்டாம் தரத்தவர்களாக நடத்தப்பட்டோம். நான் அனைத்தையுமிழந்துவிட்டு வந்துவிட்டேன். வீடு, சொத்துக்கள் அனைத்தும்....ஆனால் இன்னும் அங்கு எனது உறவினர்கள் வாழ்கின்றனர். இந்தியாவுக்கு வந்து வாழ்வதற்காக அவர்களும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். பாகிஸ்தானில் இந்துக்கள் என்றால் சிறுபான்மையினர்கள் அல்லது மிருகங்கள். எங்களை பாவமாக பார்க்கும் அவர்கள், சொல்லில் அடங்கா கொடுமைகளை புரிவார்கள். ஆனால் எனது பிள்ளைகள் அதனை அனுபவிக்கக் கூடாது. அதனை தவிக்க நான் அந்த நாட்டிலிருந்து தப்பித்துவிட்டேன். இங்கு அவர்களால் முன்னேற்றமான வாழ்க்கையை வாழ முடியும்'' என்றார். 

அங்கு வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தனது பெயரை நஸீரா என்று குறிப்பிடுகிறார். இஸ்லாமிய பெயர்போல இருப்பது குறித்து அவரிடம் காவலர்கள் கேட்டதற்கு அவர் கூறும் கதை இதோ... ''எனது பெற்றோர் எனக்கு வேண்டுமென்றே இந்தப் பெயரை வைத்தனர். இந்துப் பெண்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. இஸ்லாமியர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க தான் இப்படி பெயர் வைத்தார்கள்.  இங்கு நாங்கள் அந்த பயமில்லாத வாழ்க்கையை வாழ வந்தோம்'' என்று சொல்லி முடிக்கிறார்.

தொடர்புடையவை: 

வலுக்கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பாகிஸ்தானிய இந்துக்கள்!

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.