'இந்தியாவில் சுரண்டியதை திரும்ப செலுத்த நினைத்தால் பிரிட்டன் சாம்ராஜ்யமே வீழ்ந்துவிடும்' - உட்ஸா பட்நாயக்

  Padmapriya   | Last Modified : 09 Nov, 2018 09:49 pm

britain-would-collapse-if-it-tried-to-pay-back-the-money-it-drained-from-india

173 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து வடிகட்டி கொண்டுசென்றவற்றை திரும்பச் செலுத்த பிரிட்டன் பேரரசு நினைத்திருந்தால், அதன் சாம்ராஜ்யமே வீழ்ந்திருக்கும் என்கிறார் தேர்ந்த பொருளாதார நிபுணர், பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையத்தின் பேராசிரியர் உட்ஸா பட்நாயக்.  டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் இவ்வாறு அவர் கூறுகிறார். 

'Land and Labour Questions in the Global South'என்ற உலகளாவிய தென்பகுதியில் உள்ள நில மற்றும் தொழிலாளர் சார்ந்த கேள்விகள் குறித்த மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் பங்கேற்ற அவர், இது குறித்து அந்த மாநாட்டில் விவரிக்கிறார். அதில் இன்றைய தலைமுறை அறிந்திடாத பல நுட்பமான தகவல்கள் அடங்கியுள்ளது.  அதாவது 1765 முதல் 1938 வரையென இந்தியா மீது படையெடுத்து ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன் ஆட்சியாளர்கள், தற்போது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகித்தத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக இந்தியாவிலிருந்து அந்தக் காலக்கட்டத்திலேயே கொண்டு சென்றனர்.  அதன் மதிப்பு 9.184 ட்ரில்லியன் பவுண்டு என மிக அபாரமான செல்வமதிப்பாகும் (இந்திய மதிப்பில் கூறினால், கிட்டத்தட்ட ஏழாயிரத்து எழுநூறு லட்சம் கோடி ரூபாய்). இது தற்போதைய அந்நாட்டின் வளர்ச்சி விகிதத்தை விட அதிகமானது என்பதை இப்போது தெரிந்துகொள்ள முடியும். 

இந்தியாவில் காலனி ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன், தனி மனிதனின் சராசரி வருவாயை அடிவாங்கச் செய்தது. அதாவது  1909 முதல் 14 வரை 197  கிலோவாக இருந்த தனிநபர் ஒருவருக்கான உணவு தானியங்களின் கையிருப்பு, காலனி ஆதிக்கத்துக்கு பிறகு 1946 இவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற இருந்தச் சூழலில் 136.8 கிலோ என்றளவில் பன்மடங்கு சரிவை சந்தித்தது.  இது ஒரு தனி மனிதனின் வாங்கும் திறனை கடுமையாக பாதித்தது.  நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடி, தனிநபரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தி இந்திய மக்கள் மத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தியது. 

இந்தியாவைப் போலவே, கரீபியன் போன்ற நாடுகளிலும் காலனி ஆதிக்கம் செலுத்திய ஆட்சியாளர்கள், தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யமுடியாத குறிப்பிட்ட பொருட்களை மட்டும் தயாரிக்க அடிமைப்படுத்திய நாட்டு மக்களை நிர்பந்தித்தனர். இங்கிருந்து தாராளமாக சுரண்டப்பட்ட பொருட்களை தங்களது நாடுகளுக்கு தங்க இருப்பையும் அந்நிய செலாவணியையும் உயர்த்திக் கொண்டனர். இந்தியாவிலிருந்து உலகளாவிய ஏற்றுமதியாகி கிடைத்த உபரி வருவாய் அனைத்தும் லண்டனில் இருந்த இந்தியாவுக்கான தலைமை செயலாளரது கணக்குக்கு சென்றது. பின், அதிலிருந்து ஒரு துளி தங்கமோ அல்லது நிதியோ காலனி நாடுகளுக்கு திரும்பவே இல்லை. 

அயல் நாட்டு அந்நிய செலாவணியை உயர்த்த உழைத்த மக்களுக்கு, அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட வரிப் பணித்திலிருந்தே சொற்ப கூலி வழங்கப்பட்டது. மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப் பணம் அனைத்தும் மக்களின் நலன்களில் செலவிடப்படாமல் இறக்குமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  அபரிவிதமாக வகுக்கப்பட்ட பட்ஜெட், நாட்டின் வருவாய் மதிப்பை பாதித்தது. இது விவசாயிகளின் வயிற்றை சுருக்கி காய வைத்தது. 

1946ல் இந்தியா சந்தித்த தனிநபர் உணவு பற்றாக்குறையை, இன்றளவும் தெற்கு பகுதிகளில் எந்த நாடும் சந்தித்ததில்லை. இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட உபரி ஏற்றுமதியை இன்றளவில் 5 சதவீத வட்டி விகிதத்தோடு கணக்கிட்டால், அதன் மதிப்பு 9.184 ட்ரில்லியன் பவுண்டு என மிக அபாரமான பெருந்த்தொகையாக இருக்கும். 

செர்பிய அமெரிக்க பொருளாதார வல்லுனரான பிராங்கோ மிலாநோவிக், வடக்கு முதல் தெற்குவரையிலான உலகளாவிய நெறிமுறைகள் குறித்து பேசும்போது, ''இந்தியாவிடமிருந்து வடிகட்டிக் கொண்டு சென்ற செல்வங்களை பிரிட்டன் திருப்பிக் கொடுக்க வேண்டும்'' என்கிறார். ஆனால் அது சாத்தியமே இல்லாதது. 200 வருடங்களாக சுரண்டியதிலிருந்து துளியளவும் திருப்பி செலுத்தக் கூடிய திறன் தற்போது அந்நாட்டிடம் இல்லை.  அதன் வருவாய் குறைப்பு கொள்கைகள் தான் இந்தியாவின் உணவு இருப்பு குறைய காரணமானது. 

உதாரணமாக, மத்திய அரசாலும் மாநிலங்களாலும் இணைந்து கிராமப்புற செலவினங்களுக்கு அளிக்கப்படும் பங்கு 1990களின் மத்தியில் வெகுவாக சரிந்தது.  அதேபோல மத்திய அரசாலும் மாநிலங்களாலும் பங்கேற்கப்படும் பொதுப் பணித்துறை செலவினம் 1990-ன் பாதியில் கவலைக்குரியும் வகையில் சுருங்கியது. 

பின்னர் தான் கட்டமைப்பு மற்றும் வருவாய் குறைப்பு திட்டங்களை டாக்டர். மன்மோகன் சிங் அரசு முன்னெடுத்தது. ஆனால் 2000-05 காலகட்டத்திலும் 1980களில் இருந்த வளர்ச்சி விகிதம் தான் இருந்தது.  பின்னர் இந்தப் பிரச்னை 2005-06 மற்றும் 2010-11 வரையிலான காலகட்டங்களில் உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக இன்னும் மோசமான சூழலுக்கு இட்டுச் சென்றது. விலைவாசி ஓங்கியது. 2010-11 மற்றும் 2014-15 காலகட்டங்களில் வருவாய் குறைப்பு கொள்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் முதல் உணவுக்காக மக்கள் செலவு செய்யும் சூழலே குறைந்தது. அதனை விளைவாக ஊட்டச்சத்து சரிநிலைக்கு கீழே சென்றது. 

சீர்திருத்த காலகட்டத்துக்கு முன், உணவு தானியத்தின் கையிருப்பு உயர்ந்தது. ஏற்றஇறக்கத்துடன் 1972ல் 452 கிராமாக இருந்த தனி நபரின் ஒரு நாளைய உணவு என்பது 1990ல் 494கிராமாக உயர்ந்தது.  பின்னர் வர்த்தகம் தாராளமயமாக்கப்பத வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏற்றுமதி சார்ந்த பயிர்களை வளர்ப்பதற்கு விலைநிலங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் வெகுஜன மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வருமானமும் குறைத்தது. குறைந்தபட்ச விலையில் கொள்முதல் செய்வதற்கான ஆதர விலையைக் கூட அரசாங்கம் தர மறுத்தது. இவற்றின் விளைவாக உணவு கையிருப்பில் தொடர் சரிவு ஏற்பட்டது. 

2013ல் 447 கிராமாக தனி நபரின் ஒரு நாளைய உணவு தேவை என சுருங்கியது. உற்பத்தி பெருகியபோதிலும் இந்தச் சூழல் நீடித்தது. வருவாய் குறைச்சலும் பணவீக்கமும் மிகக் கடுமையானதாக இருக்கும் போது, உற்பத்தி எவ்வளவு பெருகினாலும், ​​தேவை பூர்த்தியடையாது. ஏனெனில் வளர்ச்சி விகிதமும் மக்களின் வாங்கும் திறனும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. 

ஆகையால், உற்பத்தியானப் பொருள் தேக்கமடையும் விளைவாக ஏற்றுமதி அதிகரிக்கும். சொந்த நாட்டு மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும். 

இந்தியாவில் தனி நபர் ஒருவரின் தேவைக்கான தானியங்களின் இருப்பு, 2011 ஆம் ஆண்டில் 176.5 கிலோவாக இருந்தது. இது 2ஆம் உலகப் போருக்கு முன் இருந்த அளவுகோள் என்கிறார் பட்நாயக். 

டெல்லியில் 2015ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் மறைந்த சாம் மாயோ என்ற ஆபிரிக்க முன்னணி ஆப்பிரிக்க அறிஞருக்கு மரியாதை செலுத்தும்விதமாக இந்த மூன்று நாள் மாநாடு நடைபெற்றது. இவர் ஜிம்பாப்வே நில சீர்திருத்த செயல்முறைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஆவார். இது தவிர 'Land and Labour Questions in the Global South'என்ற உலகளாவிய தென்பகுதியில் உள்ள நில மற்றும் தொழிலாளர் சார்ந்த கோப்புகளும் மத்திய தொழிலாளர் நலத் துறையால் மாநாட்டில் பகிரப்பட்டது 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.