ஸ்ரீராம ஜென்ம பூமி: அறியவேண்டிய உண்மைகளும் அகழ்வாராய்ச்சி குறிப்புகளும் 

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 02:50 pm
sri-rama-janma-bhumi-movement-at-a-glance

ஸ்ரீ ராம தரிசனம் என்பதற்காக எதையும் தியாகம் செய்யும் கோடிக்கணக்கான இந்துக்களின் பெருமைமிகு தேசம் தான் அயோத்தி. ஆனால ஸ்ரீராமர் பிறப்பிடமான அவரது ராஜ்ஜியத்தில் தான் நீண்டகாலமாக அரசியல் சதிகள் பினைக்கப்பட்டதன் விளைவால் பெருவாரியான இந்து சமுதாய மக்கள் மறைமுகமாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். 

ஆனால் அங்கு பரந்த வெட்ட வெளியில், வெறும் கூரைக்குக்  கீழ், எளிமையின் நாயகனான  ‘ராம் லாலா’  சிலை உள்ளது. இதற்கு தான் இவ்வளவு போராட்டம். ‘மதச்சார்பின்மை’ என்ற பெயரில் இந்து மத வெறுப்பைக் கொண்டிருக்கும் அறுவருப்பானவர்களின் செய்கைகளுக்கு கடவுளா பலியாக வேண்டும்? என்கிற கேள்வியை தான் நீண்ட காலமாக ராம ஜென்ம பூமி இயக்கம் முன்வைக்கின்றது. தற்காலத்தில் நாம் காணும் சிதறிக்கிடக்கும் சிற்பக்கலை நயம் மிக்க தூண்களைத்  தாண்டி இதில் அறியவேண்டிய உண்மைகள் ஏராளம் உள்ளன. சற்றுப் பின் நோக்குவோம். 

 1. இந்து சமய நூல்களில் கல்பகாலம் என்பது படைப்புக் கடவுள் பிரம்மனின் ஒரு பகலின் கால அளவைக் குறிக்கிறது. ஒரு கல்பகாலத்தில் 14  காலங்கள் இடம்பெறுகின்றன. அதில் வைவஸ்வத மன்வந்தரம் 7வது கல்பகாலமாகும். இந்த காலகட்டத்தில் சராயூ நதிக்கரையில் அயோத்தியை வஸ்வத மனு கண்டுபிடித்தார். 

2. இதில் தான் சூரிய வம்சத்தில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பகவான் விஷ்ணுவின் அவதாரமாக ஸ்ரீ ராமரின் பிறப்பு அமைந்தது. பயங்கரவாதம், துன்மார்க்கம் மற்றும் வெறுப்பு உணர்ச்சியிலிருந்து உலகத்தை காப்பாற்றுவதன் நோக்கமாக இவர் மனிதகுலத்தில் பிறந்த வருங்கால தலைமுறையினருக்கு மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் ஆசீர்வாதமாக வழங்கவந்ததாக நமது நூல்கள் குறிப்பிடுகின்றன. 

3. ஸ்ரீ ராமனின் பிறப்பிடமான ஸ்ரீ ராம ஜன்ம பூமியில் அவரது நினைவை மகிமைப்படுத்த 2100 ஆண்டுகளுக்கு முன்னர் சாகரி சாம்ராட்
விக்ரமாதித்யா 84  தொடுதூண்கள் கொண்டு ஸ்ரீ ராமரின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் வெவ்வேறு காலகட்டத்தில் ராம ஜன்ம பூமிக்கு சிதைவு ஏற்ப்பட்டது. இதில் சராயூ நதிக்கரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கு கஹத்வால் காலகட்டத்தில் பாபர் கோயில் எழுப்பப்பட்டது. 

4. பின்னர் 482 ஆண்டுகளுக்கு முன்பு, 1528 பொது சகாப்தத்தில் மொகாலிய மன்னர் பாபர் இந்தப் பகுதி மீது படையெடுத்தபோது அவரது தளபதியான மிர் பாகி என்பவரால் அக்கோயில் இடிக்கப்பட்டது.  இப்படித் தாங்கள் செல்லும் இடங்களிலும், வெல்லும் இடங்களிலும் மசூதிகளைக் கட்டுவதை முகலாய அரசர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அங்கு கட்டப்பட்டது பாபர் மசூதி என அழைக்கப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றண்டுவரை அமைதியாக இருந்த இந்துக்கள் பின்னர் அங்கு மீண்டும் ராமர் கோயில் வர வேண்டும் என விரும்புகின்றனர். 

5. அப்போது முதன்முதலாக 15 நாட்கள் மொகாலிய படை வீரர்களை எதிர்த்து ஸ்ரீ ராம பக்தர்கள் போரில் ஈடுபட்டனர். அப்போது படையெடுப்பாளர்கள் 176,000 ராம பக்தர்கள் மீது பீரங்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ராம ஜென்ம பூமியை பாதுகாக்க பக்தர்கள் தங்களது உயிரை நீத்தனர். 

6. ராமர் கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் வலுக்கட்டாயமாக வலுக்கட்டாயமாக மசூதி போன்று வெளிப்புறம் மாற்றப்படுகிறது. அது கோயிலின் இடுபாடுகளால் விழுந்த கற்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டே மீண்டும் எழுப்பப்படுகிறது.  பிரார்த்தனை கூடம், நீரூற்று போன்றவை கட்ட உத்தேசிக்கப்பட்டது. ஆனால் படையெடுப்பாளர்கள் ஒருபோதும் அதனை கட்டமைக்க முடியவில்லை. 

7. இடைப்பட்ட 1528 பொது சகாப்தம் முதல்  1949 ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் கோயில் எழுப்ப 76 முறைகள் போராட்டங்கள் நடந்தது. இதில் மன்னர் குரு கோவிந்த் சிங், மகாராணி ராஜ் குன்வர் மற்றும் பல மன்னர்கள் இந்தப் புனித இடத்தில் ஸ்ரீ ராமர் கோயிலை மீண்டும் நிறுவ போராடினர்.  ஒரு சமாதான ஏற்பாடாக 1883 -ல் மசூதிக்கு வெளியே இந்துக்கள் வழிபடுவதற்கு 'ராம் சபூதரா' என்கிற ஒரு தற்காலிக பீடம் அமைக்கப் பட்டது. 1859ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் அயோத்தியில் இரு மத்தினரும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. உட்புறம் முஸ்லீம்கள் தொழவும், வெளியே இந்துக்கள் வழிபடவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரு வழிபாட்டையும் பிரிக்கும் வகையில் சுவர் எழுப்பப்படுகிறது. இந்த சுவர் 1934ல் ஏற்பட்ட கலவரத்தின் போது இடிக்கப்படுகிறது. 

பின்னர் 1885-ல் மஹந்த் ரகுவர் தாஸ் என்பவர் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ராமர் அவதரித்த இடத்தில் இருந்த ராமர் ஆலயத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தில் மீண்டும் ராமருக்கு ஆலயம் எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடினார்.  வழக்கை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி F.E.A கௌமியர் 'இந்துக்களுக்கு சொந்தமான புண்ணிய பூமியில் மசூதி கட்டப்பட்டது வருத்தத்திற்கு உரியது. ஆனால் இது 356 வருடத்திற்கு முந்தைய சம்பவம். இப்போது சரி செய்வதற்கான காலம் கடந்து விட்டது' என்று தீர்ப்பளித்துள்ளார்.  பல்வேறு கலவரங்கள், தாக்குதல்களால் சேதமடைந்த மசூதி 1934- ஆம் ஆண்டு முதல் மூடி வைக்கப்பட்டதுடன், தொழுகையும் நடைபெறவில்லை.

8. பின்னர் 1949 டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவு ராம் சபூதரா பகுதியில் கோயில் இடிக்கப்பட்டு கட்டப்பட்ட மசூதிக்குள் பாலராமர் உருவம் சுயம்புவாக தோன்றியது. அப்போது இந்திய பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார்.  கோவிந்த் பலாப் பாண்ட் உத்திரப்பிரதேச முதல்வராகவும் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ கே.கே. நாயர் பைசாபாத்தின் மாவட்டம் நீதிபதியாக இருந்தார். 

9. அங்கு சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக, நகர நீதிபதிகள் ஸ்ரீ ப்ரியா தத் ராம் என்பவரை பாதுகாவலராக நியமித்தார். இவர் மசூதியின் கதவுகளை பூட்ட உத்தரவிட்டனர்.  இருப்பினும் உள்ளே இருக்கும் ஸ்ரீராம கடவுளுக்கு நாளுக்கு 2 முறை பூஜைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 
பக்தர்கள் பூட்டப்பட்ட கதவு வரை அனுமதிக்கப்பட்டனர். ராமர் வழிபாடும் சடங்குகளும் தொடர்ந்துகொண்டே இருந்தன.  இதனை உள்ளூர் மக்கள் கொண்டாடினர். கதவுக்கு வெளியே நின்றபடி தொடர்ந்து "ஸ்ரீ ராம் ஜெய் ராம், ஸ்ரீ ராம் ஜெய் ராம்" என்றவாறு இருபத்திநான்கு மணிநேரமும் உச்சரித்தனர்.  அந்த இடம் சர்ச்சைக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டது.

10. 1950ம் ஆண்டில் ராமர் சிலையை அகற்றக் கூடாது என பைசாபாத் நீதிமன்றத்தில்,கோபால் சிங் விஷாத் வழக்கு தொடர்ந்தார். சுந்திரத்திற்கு பின்னர் அயோத்தி தொடர்பாக தொடரப்பட்ட முதல் வழக்கு இது. இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்திலேயே 1959ம் ஆண்டு ராமர் கோயில் இடத்திற்கு உரிமை கோரி பைசாபாத் கோர்ட்டில் நிர்மோகி அகாரா வழக்கு தொடர்ந்தது. இதே போல பல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. 1961ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி உபி வக்ப் சன்னி மத்திய வாரியம், எட்டு ஷன்னி முஸ்லீம்கள் இணைந்து சர்ச்சைக்குறிய இடத்திற்கு உரிமை கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

11. 1983ஆம் ஆண்டு மார்ச் மாதம் முசாபர்நகரில் நடந்த இந்துக்கள் மாநாட்டில் கலந்துகொண்ட மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ தாவு தயாள் கண்ணா அயோத்தி, முத்துரா மற்றும் காசி ஆகிய ஸ்தலங்களை இந்துக்கள் மீட்டெடுக்க அழைப்பு விடுக்கிறார். அப்போது விழா மேடையில், இந்தியாவின் இடைக்கால பிரதமராக 2 முறை பதவி வகித்த ஸ்ரீ கல்பாரி லால் நந்தாவும் இருக்கிறார். 

12. சாதுக்கள் மட்டும் ஈடுபட்ட இந்த போராட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் களம் இறங்கியது. 1984ம் ஆண்டு அனைத்து பிரிவு இந்து சன்யாசிகளையும் ஒருங்கிணைத்து அயோத்தியை மீட்க ஆலோசனை கூட்டத்தை விஎச்பி ஏற்பாடு செய்தது. அதில் முதலில் ராமர் கோயிலை மீட்போம், பின்னர் நாடுமுழுவதும் அயோத்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கோயில் கதவை திறப்போம் என முடிவு செய்யப்பட்டது.

13. அதன் பேரில் விஎச்பி சார்பில் ராமர் ஜானகி ரதயாத்திரையை பீகார் மாநிலத்தில் சீதாமார்ஹியில் தொடங்கி அயோத்தி வழியாக டெல்லி க்கு செல்லும் வகையில் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. கோயிலின் பூட்டை திறக்க வலியுறுத்தி ஓராண்டு கழித்து யாத்திரை மீண்டும் தொடர்ந்தது. இதில் ஏற்பட்ட எழுச்சி காரணமாக பைசாபாத் மாவட்ட நீதிபதி 1-2-1986ம் ஆண்டு கோயிலின் பூட்டை திறக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராமர் கோயிலின் மாதிரி உருவானது. பின்னர் 1989ம் ஆண்டு பிரயாகையில் நடந்த கும்பமேளாவின் போது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ஏற்பாடு செய்த சாதுக்கள் மாநாட்டில் நாட்டின் அனைத்து கோயில்களிலும் ராமர் வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

14. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து ஸ்ரீராமர் நாமம் எழுதப்பட்ட 275,000 செங்கற்கள் 6 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்டு 1989ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் அயோத்தி வந்து சேர்ந்தது. 1989 நவம்பர் 9ம் தேதி பீகாரை சேர்ந்த தலீத் சகோரர்கள் காமேஸ்வர், சவ்பால் அடிக்கல் நாட்டினர். இதற்கு அப்போதைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் முதல்வராக இருந்த திவாரி அனுமதி அளித்தார். இதே காலகட்டத்தில் உபி அரசு அயோத்தி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடிக்க வேண்டும் என மனு செய்தது. இந்து இயக்கங்களை போலவே பாபர் மசூதி கமிட்டியை இஸ்லாமியர்கள் உருவாக்கினர்.

15. 1987ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அதனைத்து மனுக்களையும் வாபஸ் பெற்ற உபி அரசு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யவே, 2 ஆண்டுகள் கழித்து சர்ச்சைக்குரிய இடம் முழுவதையும் கோயிலாக அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக பைசாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 4 வழக்குகளும் அகலாபாத் ஐகோர்ட் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி சாதுக்கள் கரசேவைக்கு அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை அனைத்து இந்துக்களும் பெறும் வகையில் ஒவ்வொரு இல்லத்திற்கும் ராம ஜோதி சென்றது. அந்த ஜோதியைக் கொண்டு அந்த ஆண்டு அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். 25-19-1990ம் ஆண்டு பாஜ தலைவர் அத்வானி ராமர் ரதயாத்திரையில் வலம் வந்து மக்களிடம் ஆதரவு திரட்டினார். அதன் அடிப்படையில் மீண்டும் கரசேவைக்கு சாதுக்கள் அழைப்பு விடுத்தனர்.

16. சாதுக்களில் அழைப்பின் படி லட்சக்கணக்கான கரசேவகர்கள் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி 1990ம் ஆண்டு அயோத்தியில் உள்ளே புகுந்தனர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அப்போதைய உபி முதல்வர் முலாம்சிங் யாதவ் உத்தரவிட்டார். இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை இது வரையில் தெரியவில்லை. பலரின் உடல்கள் வனப்பகுதிகளிலும், ஆறுகளிலும் இழுவிடப்பட்டு மறைக்கப்பட்டன. அதையும் மீறி சில கரசேவகர்கள் பாபர் மசூதியின் உச்சியில் ஏறி காவிக் கொடியை பறக்கவிட்டனர். இதனால் கலவர சூழ்நிலை உருவானதும் பிரதமர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ஆனால் டெல்லியை நோக்கி அதுவரை இல்லாத மாபெரும் பேரணி நடத்தப்பட்டதை அடுத்து முலாயம் சிங் பதவி பறிபோனது. 

17. இதே காலகட்டத்தில் உபி அரசு அயோத்தி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடிக்க வேண்டும் என மனு செய்தது. இந்து இயக்கங்களை போலவே பாபர் மசூதி கமிட்டியை இஸ்லாமியர்கள் உருவாக்கினர்.

18. 1987ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அதனைத்து மனுக்களையும் வாபஸ் பெற்ற உபி அரசு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யவே, 2 ஆண்டுகள் கழித்து சர்ச்சைக்குரிய இடம் முழுவதையும் கோயிலாக அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பாக பைசாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 4 வழக்குகளும் அகலாபாத் ஐகோர்ட் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றப்பட்டன.

 

19. இதைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி சாதுக்கள் கரசேவைக்கு அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை அனைத்து இந்துக்களும் பெறும் வகையில் ஒவ்வொரு இல்லத்திற்கும் ராம ஜோதி சென்றது. அந்த ஜோதியைக் கொண்டு அந்த ஆண்டு அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். 25-19-1990ம் ஆண்டு பாஜ தலைவர் அத்வானி ராமர் ரதயாத்திரையில் வலம் வந்து மக்களிடம் ஆதரவு திரட்டினார். அதன் அடிப்படையில் மீண்டும் கரசேவைக்கு சாதுக்கள் அழைப்பு விடுத்தனர்.

20. சாதுக்களில் அழைப்பின் படி லட்சக்கணக்கான கரசேவகர்கள் 30-10-1990ம் ஆண்டு அயோத்தியில் உள்ளே புகுந்தனர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அப்போதைய உபி முதல்வர் முலாம்சிங் யாதவ் உத்தரவிட்டார். இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை இது வரையில் தெரியவில்லை. பலரின் உடல்கள் வனப்பகுதிகளிலும், ஆறுகளிலும் இழுவிடப்பட்டு மறைக்கப்பட்டன. அதையும் மீறி சில கரசேவகர்கள் பாபர் மசூதியின் உச்சியில் ஏறி காவிக் கொடியை பறக்கவிட்டனர். .இதனால் கலவர சூழ்நிலை உருவானதும் பிரதமர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

21. 1991ம் ஆண்டு மசூதி மற்றும் சர்ச்சைக்குரிய இடத்தின் 2.77 ஏக்கர் நிலத்தை உ.பி அரசு கைப்பற்றியது. அதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் அரசு இடத்தை வைத்துக் கொள்ளலாம் ஆனால் அதில் எவ்விதமான கட்டுமானப்பணியையும் மேற்கொள்ள கூடாது என கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் உபியில் தேர்தல் வர பாஜ ஆட்சியை பிடித்து கல்யாண்சிங் முதல்வரானர்.

22. அதன்பின்னர் ராமர் பாதுகை நாடுமுழுவதும் வலம் வந்தது. இதே காலகட்டத்தில் மீண்டும் கரசேவைக்கு அழைப்பு வரவே 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்கள் அங்கிருந்த சர்ச்சைக்குரிய கட்டத்தை இடித்து, தற்காலிக வழிபாட்டிற்கான ஏற்பாட்டை செய்தனர். இதனால் பாஜ ஆட்சி செய்த 4 மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. அத்வானி, உமாபாரதி உட்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது.

23. 1994ம் ஆண்டு விசாரணை நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கட்டுமானம், வழிபாடு நடத்த கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து 1996ம் ஆண்டு மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த காலகட்டத்தில் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். 2001ம் ஆண்டு ராமர் கோயில் கட்டப்படும் என்று விஎச்பி அறிவித்தது. கடந்த 2002 அன்று அயோத்தி தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண சத்ருகன் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடந்தும் பலன் இல்லை.

24. 2002ம் ஆண்டு உ.பி தேர்தலில் பாஜ ஆட்சிக்கு வந்தால் ராமர்கோயில் கட்டப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. கோயில் கட்டுமானப்பணிகளை தொடங்க 2002ம் ஆண்டு மார்ச்15ம் தேதியை விஎச்பி கொடுவாக விதித்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்த போது நாடுமுழுவதும் கலவரம் வெடித்தது. 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி கோத்ராவில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. அயோத்தியில் இருந்து திரும்பிய பக்தர்கள் 59 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இதன் எதிரொலியாக நாடு முழுவதும் கலவரம் வெடித்தது.

25. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் சர்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்று முடிவு செய்ய ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ராமர்கோயில் இருந்ததற்கான ஆதாரம் திரட்ட தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் செயல்பட்டு மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருந்ததாக ஆகஸ்ட் மாதம் கோர்ட்டில் ஆவணங்கள் தாக்கல் செய்தனர்.

26. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பாபர் மசூதி வழக்கில் 7 தலைவர்களுக்கு தொர்பு இருப்பதாக அறிவித்த கோர்ட் அத்வானியை விடுவித்தது. அவரோ 2004ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அறிவிக்கவே, கோர்ட் அத்வானி தொடர்பான தன் முடிவை பரிசீலனை செய்வதாக அறிவித்தது.

27. 2005ம் ஆண்டு ஜூலை மாதம் வெடி பொருட்கள் அடங்கிய ஜீப் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டது. இதில் 6 பேரை பாதுகாப்பு போலீசார் சுட்டுக் கொன்றனர். 2009ம் ஆண்டு ஜுலை மாதம் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகள் கழித்து அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைத்தது.

28. 2010ம் ஆண்டு செப்.30 அன்று அலகாபாத் ஐகோர்ட் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்று தீர்ப்பளித்து. அதில் சர்ச்சைக்குரிய இடத்தை 3 பிரிவாக பிரித்து ஷன்னி முஸ்லீம்கள், நிர்மோகி அகாரா, ராம்லீலா அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் பெரும்பான்மை நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதில் ஷியா மத்திய முஸ்லீம்கள் வாரியம் சர்ச்சைக்குறிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்வதை ஏற்றுக் கொள்வதாகவும், மசூதியை சிறிது தள்ளி கட்டித்தர வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்தது. ஆனால் அதை ஷன்னி முஸ்லீம் அமைப்பு ஏற்காமல் தங்கள் கருத்தை மட்டுமே கேட்க வேண்டும் என கோர்ட்டில் மனுத்தாக்கால் செய்தது.

29. இந்நிலையில் உபி அரசு வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் மொழி பெயர்த்து கோர்ட்டில் ஒப்படைத்தது. தலைமை நீதிபதி தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கிறது. சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது இதற்கான விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. இப்படி பாபர் மசூதி கட்டப்பட்டதில் இருந்து இன்று வரை சுமார் 500 ஆண்டுகள் இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

தற்போதைய நிலை

மறு புறம் அயோத்தி விவகாரத்தில் சமரச முயற்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன. அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்கு ஓரிரு மாதங்களில் முடிவு எட்டப்பட்ட விடும் என்று சங்கப்பரிவார் அமைபுகள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. இதற்கான முழு ஏற்பாடுகளையும் இந்து மத ஆர்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.  பீகார் மாநிலம் சோனிபூரில் உள்ள சாந்தி சமாஜ்ய உறுப்பினர்கள் ஸ்ரீ ராமர் கோயில் கட்டப்படும் நேரத்துக்கு அதற்கான முனைப்போடு தயார் நிலையில் இருக்கின்றனர். 

இது குறித்து சரியான முடிவு எடுக்கப்படாவிட்டால் சாதுக்களும் சங்க உறுப்பினர்களுமே தன்னிச்சையாக கோயில் கட்டும் பணிகளை மேற்கொள்வர் என்ற முடிவுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வந்துள்ளனர். அரசியல் நோக்கத்தைத் தாண்டி ஸ்ரீராமர் பிறந்த மண்ணில் அவருக்கென மீண்டும் கோயில் எழுப்பப்படும் என்பது வெகுஜன இந்து மக்களின் நம்பிக்கையாகும். 

அயோத்தி குறித்த அகழ்வாராச்சி குறிப்புகளை இக்கட்டுரையின் அடுத்த பாகத்தில் விரிவாக பார்ப்போம். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close