சிட்டுக்குருவி அழிவுக்கு உண்மையில் டவர் இருப்பதுதான் காரணமா?

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Dec, 2018 07:50 am

rajini-s-2-0-sparks-debate-on-cell-tower-radiation

சிட்டுக்குருவி அழிவுக்கு டவர்களும், செல்போன்களும்தான் காரணம் என இயக்குநர் ஷங்கர்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 2.0 படத்தில் கூறப்பட்டது. உண்மையில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன்கள்தான் காரணமா? என தெரிந்து கொள்ளலாம். 

இயக்குநர் ஷங்கர் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் மூன்றாவதாக இயக்கப் பட்டிருக்கும் திரைப்படம் 2.0. இந்தத் திரைப்படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது. ‘எந்திரன்' படத்தின் 2-ம் பாகமான இதனை ‘லைகா புரொடக்‌ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் அதிக பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார். இதில் ரஜினியுடன் இணைந்து அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வில்லனாக மிரட்டியிருக்கும் அக்‌ஷய் குமார், ஃபிளாஷ் பேக்கில் பட்சி ராஜன் என்ற பறவைகள் ஆர்வலராக நடித்திருப்பார். இந்தக் கதாபாத்திரம் பறவையியல் வல்லுநர் சலீம் அலி என்பவரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்தியாவிலேயே அதிக செலவில் அதாவது சுமார் 550 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் உலகம் மனிதர்களுக்கானது அல்ல, என்ற வசனம் பயன்படுத்தப்பட்டிருக்கும். கற்பனை கதாபாத்திரங்களை மட்டும் திரை முன் காட்டி கிராபிக்ஸ் செய்யாமல், சிந்திக்கவைக்கும் சில கருத்துகளை கிராபிக்ஸாக காட்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். சொல்லவரும் கருத்துகளையும், சமுதாய சிந்தனைகளையும் ரோபோவை வைத்து மிரட்டியிருந்தார். சமூகத்தில் இருக்கும் பிரச்னையை மட்டும்சொல்லாமல் அதற்கான தீர்வுகளையும் சொல்வதே ஷங்கரின் ஸ்டைல்...

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நம் வீடுகளின் திண்ணைகளுலும், மாடங்களிலும் அழகாக கூடுக்கட்டி, அழகிய குரலில் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய குட்டிப்பறவை சிட்டுக்குருவி. நகரமயமாதலின் காரணமாக செல்போன் கோபுரங்கள் அதிகரித்து வருவதால்தான் சிட்டுக்குருவி நம் கண்களுக்கு தெரியாமல் அழிந்ததாகவும், நம் குழந்தைகளுக்கு சிட்டுக்குருவியை புத்தகத்தில் காட்டி சொல்லிக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் 2.0 படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொருவரின் செல்போன்களும், சிட்டுக்குருவியின் சவப்பெட்டி என்ற வாசகம் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த படத்தை பார்க்கும்போது சிட்டுக்குருவியின் அழிவுக்கு செல்போன் டவர்களும் ஒரு காரணமாக இருக்கலாம் என யோசிக்கவைக்கிறது. 

அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் நன்மை எந்த அளவிற்கு உண்டோ அதே அளவில் தீமைகளும் உண்டு என நாம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அந்த தீய பாதிப்பு நமக்கு வரும்போது  அந்த கஷ்டம் புரியும் என சொல்லாமல் சொல்கிறது 2.0. நமக்கு டவர் கிளியராக கிடைக்கவேண்டும் என்பதால் செல்போன் டவர்களிலிருந்துவரும் கதிர்வீச்சுகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வைப்பதால் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அழிவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் இல்லாமல் இன்றைய  இளைஞர்கள், குழந்தைகள், முதியவர்கள் என யாராலும் இருக்க முடியாது. இது அனைத்துமே ஷங்கரின் கழுகுப்பார்வை. இனி நிஜ வாழ்விற்கு வருவோம்... 

அனுமதிக்கப்பட்ட கதிர்வீச்சு அளவைவிட அதிகமாக வைத்ததால் ஏர்டெல், வோடோபோன், ரிலையன்ஸ்,ஏர்செல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து தொழில்நுட்பங்களையும் சேர்த்து இந்தியாவில் உள்ள மொத்த செல்போன் டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரம். அதுமட்டுமின்றி உத்தரபிரதேசத்தில் 54 ஆயிரமும், தமிழ்நாட்டில் 39 ஆயிரமும், ஆந்திராவில் 36 ஆயிரமும், மகாராஷ்ட்ராஅவில் 36 ஆயிரமும், பீகாரில் 32 ஆயிரமும் மொபைல் டவர்கள் உள்ளன.

அண்மையில் பறவைகள் நல அமைப்பு செல் டவர்களால் பறவைக்கு ஆபத்தா? என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், முதலில் சிட்டுக்குருவியும், அடுத்த இடத்தில் தேனீக்களும், மூன்றாவது இடத்தில் வெள்ளை கொக்கு இனமும் இருப்பது தெரியவந்துள்ளது. செல்போன் டவர்களால் பறவைகள் மட்டுமல்லாது செடிகள் 87%, மனிதர்கள் 62%, மற்ற விலங்குகள் 74% என்ற சதவீதங்களில் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆனால் பெரிதும் பாதிக்கப்படுவது பறவைகளே..! 

பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

  • பாதிக்கப்பட்ட பறவையால் அதிக தூரத்துக்கு பறக்க முடியாது. 
  • பாதிக்கப்பட்ட பறவைகள் திசையறியும் திறன் இழந்துவிடும். 
  • பறவைகளின் முட்டைகள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு உறைந்துவிடுகிறது. 

தற்போதைக்கு பறவைக்கு வந்த இதே அழிவு நாளை மனிதர்களுக்கும் வரலாம். மனிதர்களும் கதிர்வீச்சல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு நேரிடலாம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது 2.0. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.