பொங்கல் ஸ்பெஷல் - சக உயிர்களைப் போற்றி வாழும் தமிழர்களுக்கு இணை யார்?

  கோமதி   | Last Modified : 15 Jan, 2019 07:13 pm

pongal-special-who-can-be-equal-to-our-great-tamilians-who-concerns-for-his-co-lifebeings

தமிழ்நாட்டில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுக்களான சல்லிக்கட்டு போல் உலகெங்கும் கூட பாரம்பரிய விளையாட்டுகள் கொண்டாடப்படுகின்றன. 

அமெரிக்காவில் ரோடியோ என்ற மிகப் பழமையான விளையாட்டு ஒன்று நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டின் போது வீரர்கள் காளை மாட்டின் மீது ஏறி அமர்ந்துகொள்வார்கள். மாடு அங்குமிங்கும் தறிகெட்டு ஓடும். மேலும் கீழும் துள்ளி குதிக்கவும் செய்யும். வீரர் மாட்டின் மீது தனது பிடியைத் தளர்த்தாமல் கீழே விழாமல் இருந்தால் வெற்றி பெற்ற வீரனாக அறிவிக்கப்படுவார். வீரர் தவறி மாட்டின் கால்களுக்குள் விழுந்தாலோ, கீழே விழுந்தாலோ உயிர் இழக்கவும் நேரிடலாம்.

ஸ்பெயின் நாட்டில் நடக்கும் காளை சண்டை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் போல் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இந்த காளை சண்டைக்கும், நமது ஜல்லிக்கட்டுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. நாம் காளைகளை அரவணைத்து அன்புடன் அடக்கி ஆளுகிறோம். காளையை அடக்குவதற்கு எவ்விதமான ஆயுதங்களையும் பயன்படுத்துவதில்லை. காளையைக் கொன்று வீரத்தைக் காட்ட வேண்டியதில்லை. காளையை அடக்கும் போது ஒரு குறிப்பிட்ட எல்லை வந்ததும் காளையை விட்டு விட வேண்டும். ஜல்லிக்கட்டில் வீரனும் வெற்றிபெறலாம். துள்ளி வரும் காளையும் வெற்றி பெறலாம்.

ஸ்பெயின் நாட்டில் காளையை அடக்கி ஆளாமல் அதைக் கொல்பவரே வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார்கள். அவர்கள் காளையை அடக்க ஆயுதத்தைப் பயன்படுத்தலாம். முரட்டுக் காளையைக் கொஞ்சம் கொஞ்சமாக குத்தி கிழிப்பார்கள். காளையைக் கொல்லும் வரை ஆட்டம் முடிவதில்லை. இது வருடம் முழுக்க நடைபெறும் விளையாட்டு இது. இதே போல் போர்ச்சுக்கல்,பிரான்ஸ் நாட்டில் நடக்கும் காளை சண்டையும் பிரசித்தம் பெற்றவை. ஜல்லிக்கட்டைப் போல பண்பாடு, மரபு வழியாக விளையாடும் முக்கிய விளையாட்டாக இது பார்க்கப்படுகிறது. காளைச் சண்டையில் மோதுவதற்காகவே காளைகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வகை காளைகள் 400 கிலோவில் இருந்து 600 கிலோ வரை இருக்கும். இதற்காக பயிற்சி பெறும் வீரர்களை டோரியோ என்று அழைக்கின்றனர். 

உலகம் முழுவது சுற்றி வந்தாலும் நம்முடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு இணையாக எதுமே இல்லை எனலாம். இயற்கையோடு இயைந்து,நம்மோடு வாழும் சக உயிர்களைப் போற்றி வாழும் தமிழர்களுக்கு இணை யார்?

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.