ஜெ., மரண விசாரணையும், நீடிக்கும் மர்மங்களும்...

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 08:00 pm
special-article-about-jayalalitha-death-part-4

ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனில், அமைச்சர்கள், அதிகாரிகள், ஜெ.,க்கு நெருக்கமாக இருந்த நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர், தங்கள் தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்தனர். 

இதில், சசிகலா தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் அடங்கியிருப்பதாக, சில பத்திரிக்கையாளர்கள் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது குறித்து, அவர்களிடமும் விசாரிக்கப்பட்டது. 

இந்த கமிஷனில், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது. இதற்கிடையே,  மருத்துவமனையில் ஜெ., சிகிச்சை பெற்றது குறித்த வீடியோ ஒன்றை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, அப்போதைய பெரம்பூர் எம்.எல்.ஏ., வெளியிட்டார். 

இதையடுத்து, இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதில் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவே சசிகலா, தினகரன் தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஜெ., இறந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதா அல்லது அது இயற்கையானதா என்பதில் மர்மம் நீடிக்கவே செய்கிறது. இந்த விசாரணை எப்போது முடியும், ஜெ., மரணம் குறித்த ஐயப்பாடுகள் எப்போது தீரும் என, அவரது விசுவாசிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

தொடரும்...
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close