• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற 'மீசைக் கவிஞன்’ பாரதி!

  முத்துமாரி   | Last Modified : 11 Sep, 2018 10:46 am

independence-day-special-subramanya-bharathi-s-life-history-and-important-memories

விடுதலை போராட்ட வீரர் 'மகாகவி பாரதியார்'  கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூக சீர்திருத்தவாதி என்ற பல வடிவங்களுக்கு சொந்தக்காரர். அவரை பற்றிய சில முக்கிய தகவல்கள்...

மகாகவி பாரதியார் என்பது அவரது இயற்பெயர் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தலைவர்களுள் புகழ் பெற்றவர் பாரதியார். ஆம், அவர் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882ல் பிறந்தார். சிறுவயது முதலே தமிழில் புலமை பெற்று விளங்கிய அவரது திறமையைக் கண்டு, எட்டையபுர மன்னர் வழங்கிய சிறப்பு பெயர் தான் பாரதியார். அப்போது அவருக்கு வயது 11. பாரதி என்றால் 'சரஸ்வதி' என்று பொருள்.

5 வயதில் தனது தாயையும், 16 வயதில் தன்னுடைய தந்தையையும் இழந்து வறுமையில் வாடினார். இருப்பினும், கல்வி மீதும், தமிழ் மீதும் அவர் அதீத காதல் கொண்டிருந்தார். இதன் காரணமாக அலகாபாத் பல்கலைக்கழகம் சென்று சமஸ்கிருதம், இந்தி மொழியை கற்றறிந்தார். 14 வயதிலேயே, இவருக்கும், செல்லம்மா என்ற 7 வயது சிறுமிக்கும் திருமணம் அரங்கேறியது. பின்னாளில் இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள் இருந்தனர்.

தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், வங்கம் உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் பாரதி. இதனால்தான், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதானது எங்கும் காணோம்" என்று பாடினார். 

4 வருடம் காசியில் இருந்துவிட்டு திரும்பிய அவர், என்னசெய்வதென்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்த காலத்தில்,  எட்டயபுர அரசவையில் கவிஞராக பணியாற்ற அவருக்கு அழைப்பு வந்தது. அரசவைக்கவிஞராக பணியாற்றிய பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியரானார். அதன்பிறகு பத்திரிகையாளர் ஆனார். ஆங்கில கவிஞர் ஷெல்லி மீது பாரதியாருக்கு அளவுகடந்த ஈர்ப்பு உண்டு. இதனால், ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தேசத்தந்தை காந்தியடிகளும், மகாகவியும் தங்களது வாழ்நாளில் ஒரேயொருமுறை தான் நேரடியாக சந்தித்து கொண்டனர். 1919 பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வந்த காந்தி, ராஜாஜி வீட்டில் தங்கியிருந்த போது, ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்க பாரதியாரை காந்தி அழைத்துள்ளார். ஆனால் காந்தி அதனை மறுக்கவே, பாரதி திரும்பி சென்றுவிட்டார்.  

பாஞ்சாலி சபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, புதிய ஆத்திச்சூடி, ஞானரதம், தேசிய கீதங்கள் போன்ற புகழ் பெற்ற காவியங்களை பாரதியார் எழுதியுள்ளார்.  சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பால பாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். அவரை வாழ்நாள் பத்திரிகையாளன் என்று கூறினால் அது மிகையாகாது!

இவர் தனது பாடல்கள் மூலமாக மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டினார். இவரது எழுச்சி மிக்க பாடல்கள் மற்றும் போராட்டங்களில் பங்கெடுத்தமையால் சிறைக்கும் சென்று வந்தார். 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என பெண்ணுரிமைக்காக முதலில் குரல் கொடுத்தவர் இவர் தான். 

இறுதி காலகட்டத்தில் வறுமையிலே வாழ்க்கையை  ஓட்டினார்.  தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்டமிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கை வைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை. 

1921ம் ஆண்டு வழக்கமாக தான் செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சென்ற அவரை, அங்குள்ள யானை தூக்கி எறிந்தது. தலையில் படுகாயத்துடன் இருந்த அவரை வயிற்றுவலியும் தொற்றிக்கொண்டது. அதற்கான மருந்துகளையும் அவர் எடுக்க முன்வரவில்லை.  'ஆப்கன் மன்னன் அமரனுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. 1921 செப்டம்பர் 11ம் தேதி தனது இன்னுயிரை நீத்தார். சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாட்டில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அவரது  இறுதச்சடகில் பங்கேற்றவர்கள் 20 –க்கும் குறைவானவர்களே!  

வெறும் 39 ஆண்டுகளே அவர் இவ்வுலகில் வாழ்ந்திருந்தாலும், அவரது பாடல்கள் மூலம் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார் என்பதில் எந்த ஐயமுமில்லை!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close