கார்கில் தோல்வியால் விரக்தி... அணு ஆயுத தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட பாகிஸ்தான்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 26 Jul, 2018 12:50 pm

காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில் உள்ள கார்கில் மலையைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. பாகிஸ்தானைப் பின்வாங்க செய்து, கார்கிலை இந்தியா கைப்பற்றிய தினம் ஜூலை 26. இந்தப் போர் முடிந்து 19 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. கார்கிலில் பெற்ற வெற்றியை இந்தியா கார்கில் விஜய் திவாஸ் என்று கொண்டாடுகிறது.

தோல்வியை மறக்க, மறைக்கப் பாகிஸ்தான் முயல்கின்றது.. இதற்காக, இந்தியா வெற்றி விழாவைக் கொண்டாடும் நேரத்தில், கார்கில் போர் பற்றி ஒரு புதிய தகவலைப் பரப்பித் திசை திருப்பும் தந்திரத்தை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. அதாவது, கார்கில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பாகிஸ்தான் படைகள் பின்வாங்க வேண்டிய நிலை வந்தது. இதனால், இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலை நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு, அதற்கான செயல்பாடுகளைத் தொடங்கியது.

இதுபற்றிய அறிக்கையை அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டனுக்குச் சி.ஐ.ஏ அளித்தது. உடனடியாக அவர் பாகிஸ்தானைத் தொடர்பு கொண்டு அணு ஆயுத தாக்குதலை கைவிடச் செய்தார் என்று கூறியுள்ளார். இதன்மூலம் இந்தியா தப்பியது என்பது போன்ற தோற்றத்தை பாகிஸ்தான் மீடியாக்கள் உருவாக்குகின்றன. ஆனால் அவர்கள் இந்தியாவும் அணு ஆயுதம் வைத்துள்ள நாடுதான் என்பதை மறந்துவிட்டனர்.

பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியில் அணு ஆயுதத்தை வீசினால், இந்தியா பதிலுக்குப் பாகிஸ்தானையே இல்லாமல் செய்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிந்தும், தெரியாததுபோல் நடிக்கின்றனர்! 

பாகிஸ்தானின் எந்த ஒரு பகுதியையும் துல்லியமாகத் தாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வைத்துள்ள இந்தியாவிடம் பாகிஸ்தானின் பாச்சா பலிக்காது. இந்தியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த திட்டமிட்டாலே போதும், அந்த இடத்தில் வைத்தே அதை அழிக்கும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. மேலும், இதைக் காரணம்காட்டியே பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இருந்து அழிக்கும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது என்று உலக ஆணு ஆயுத கண்காணிப்பு அமைப்புக்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close