கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த முதல் ராணுவ வீரர்... எப்படி இறந்தார் தெரியுமா?

  சௌந்தரியா   | Last Modified : 26 Jul, 2018 12:45 pm

capt-saurabh-kalia-first-martyr-in-kargil-war

துப்பாக்கி படத்தில் விஜய் ஒரு காட்சியில் ஒரு ராணுவ வீரர் எப்படி இறந்தார் என்பதை விளக்குவார். அவர் விளக்குவது போன்ற நிஜத்திலும் நடந்துள்ளது. அதுவும் கார்கில் போரில் இந்தியாவிற்காக முதலில் உயிர்தியாகம் செய்த கேப்டன் சௌரப் காளியா அப்படி தான் மறைந்தார்.

பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் பகுதியில் பிறந்த சௌரப் காளிய 1997 ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் இணைந்த 2 வருடத்தில் கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவல் தொடங்கியது. 4வது ஜாட் ரெஜிமென்டில் இவர் தலைமையில் 5 பேர் இருந்தனர். இவர்கள் 1999ம் ஆண்டு மே மாதம்  கார்கில் மாவட்டத்தின் கர்சர் லாங்பா பகுதியில் பனிமூட்டத்தின் அளவை பார்க்க சென்றிருந்தனர். 

அதற்கு முன்னர் இந்தியா-பாகிஸ்தான்  இடையே 'சிம்லா ஒப்பந்தம்' போடப்பட்டது. அதன் அடிப்படையில் குளிர்காலத்தில் இராணுவ தளங்களில் இருந்து வீரர்கள் சென்றுவிட வேண்டும். அதன் பின் கோடையில் மீண்டும் வீரர்கள் பணிக்கு வருவர். அதன்படி கேடைக்கு முன் நிலவரத்தை கண்காணிக்க செளரப் காளியா மற்றும் அவருடன் 5 வீரர்கள் சென்றுள்னனர். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் பலர் இந்திய கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவி இருப்பதை சௌரப் பார்த்து இதுகுறித்து அறிவித்துள்ளார்.

பின் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தகவல் அறிந்த இந்தியப்படையினர் அந்த இடத்திற்கு செல்வதற்குள் எதிரி ராணுவத்தினர் செள்ரப் களியா மற்றும் அவருடன் சென்ற அர்ஜுன் ராம், பான்வார் லால் பகாரியா, பிகா ராம், மூலா ராம் மற்றும் நரேஷ் சிங் ஆகியோரை சிறைப்பிடித்து கொண்டு சென்றனர். 

பின் அங்கு சென்ற இந்திய ராணுவத்தினருக்கு ரோந்துக்கு வந்த வீரர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் ரேடியோ மூலம் இந்திய வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டது தெரிந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் நூற்றுக்கணக்கில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லைப்பகுதியில் ஊடுருவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்கள் மே மாதம் 15ம் தேதி முதல் ஜுன் 7 வரை அவர்கள் பிடியில் இருந்தனர். அதன் பின் ஜுன் 9ம் தேதி அவர்கள் உடலை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த போது அவர்கள் உடல் முழுக்க சிகரெட் நெருப்பில் சுடப்பட்ட காயங்கள் இருந்துள்ளன. மேலும் அவர்கள் உயிருடன் இருந்த போதே காதுகளுக்குள் சூடான இரும்பு கம்பிகளை செலுத்தி, கண்களை குத்தி, பற்கள் மற்றும் எலும்புகளை உடைத்து, உதடுகளை கீறி, பிறப்புறுப்பு வெட்டப்பட்டு சித்தரவாதை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

இச்சம்பவம் இந்திய நாட்டை மட்டும் அல்லாது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு காரணம் இந்திய வீரர்களை சித்தரவாதை செய்ததன் மூலம் ஜெனிவா மாநாட்டில் கொண்டு வந்த ஒரு தீர்மானத்ததா பாகிஸ்தான் மீறியது. அந்த தீர்மானத்தின் படி போரில் சிறைப்பிடிக்கப்படுபவர்களுக்கு எப்படி நடத்த வேண்டும் என்ற முறைகள் அறிவிக்கப்பட்டன வேண்டும். ஆனால் பாகிஸ்தான் எல்லை மீறி நடந்து கொண்டது. இதனையடுத்து ஜூன் மாதம் 15ம் நாள் புது டெல்லியில் இருந்த பாகிஸ்தான் தூதர் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் படி சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரையிலும் எந்த நீதி கிடைக்கவில்லை. 

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக்,"சௌரப் காளிய மோசமான வானிலையால் இறந்திருப்பார்" என்று கூறினார். மற்றொருப்பக்கம் சௌரப்பின் குடும்பத்தினர் இன்றும் தனது மகன் மற்றும் 5 வீரர்கள் மீது தாக்குதல்கள் நடத்தியவர்கள் போர் குற்றம் செய்திருப்பதாக அறிவிக்கும்படி சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மரணமடைந்த சௌரப்பின் நினைவாக இமாச்சல் பிரதேசத்தின் பலம்பூரில் சௌரப் வான் விஹார் என்று ஒரு பூங்காவிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் ஒரு இடத்தின் பெயர் சௌரப் ரகர் என்று மாற்றப்பட்டது. மேலும் சௌரப்பின் வாழ்க்கை தற்போது பாலிவுட்டில் படமாக்கப்பட இருக்கிறது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.