• வியட்நாம், ஆஸ்திரேலியாவுக்கு குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணம்
  • ஜனவரி பேரணி ஓர் திருப்புமுனை: மம்தா பானர்ஜி
  • தேனி, திருவாரூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
  • இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே
  • அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்

'கார்கில் விஜய் திவாஸ்' 19ம் ஆண்டு விழா காஷ்மீரில் கோலாகல தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2018 07:07 pm

nineteenth-kargil-vijay-diwas-celebrations-began

இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றிய கார்கில் வெற்றி நாளையொட்டி, காஷ்மீரில் 'கார்கில் விஜய் திவாஸ்' விழா ஆரம்பமாகியுள்ளது. 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை கார்கில் விஷயத்தில் போராக உருவெடுத்தது. இந்தியா வசம் இருந்த கார்கில் பகுதியை யாரும் இல்லாத நேரம் பார்த்து, முறைகேடாக பாகிஸ்தான் கைப்பற்றியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. மூன்று மாதங்களாக நடைபெற்ற இந்த போரில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்தியா வெற்றி பெற்றது. 1999 ஜூலை 26ம் நாள் கார்கில் வெற்றி தினமாக அறிவிக்கப்பது. இந்தியாவை பொறுத்தவரை இந்த நாள் சாதாரண நாள் அல்ல. இந்திய ராணுவத்தின் வலிமையை இந்த உலகிற்கு உணர்த்திய நாள். அந்த நாளில் உலக நாடுகள்மத்தியில் இந்தியாவுக்கென ஒரு தனி மதிப்பு, அங்கீகாரம் கிடைத்தது என்றே கூறலாம். 

கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்கள் நினைவாக அப்பகுதியில் நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் மூன்று நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, 19வது கார்கில் போர் வெற்றி நினைவு நாளை முன்னிட்டு காஷ்மீரில் சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் 'டிராஸ் வார் மெமோரியல்' என்ற நினைவிடத்தில் விழா இன்று தொடங்கியுள்ளது. போரில் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த 527 இந்திய வீரர்களுக்கு சிறப்பு மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும், இந்த போரில் பங்கேற்ற மூத்த வீரர்களுக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த சமயத்தில்  பொதுமக்களும் அதிகமாக இப்பகுதிக்கு வருகின்றனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.