மதங்களை மறந்து இணையும் மனங்கள்! ரம்ஜானை கொண்டாடும் இந்துக்கள்!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 14 Jun, 2018 06:41 pm

hindus-also-celebrate-ramzan

"எல்லோரும் ஒர்குலம், எல்லோரும் ஒர் இனம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்... நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்!” என்ற பாரதியின் வரிகளுக்கிணங்க ரம்ஜானை இந்துக்கள் கொண்டாடுவது ஒரு கிராமத்தின் வழக்கமாக உள்ளது.

சாதி, மதம், இனத்தை கடந்து இங்குள்ள அனைவருக்கும் கடவுளும் பிரியாணியும் ஒன்றே. அப்ப சாமி கும்பிட்டுவிட்டு பிரியாணி சாப்பிடுவது மட்டும்தான் பண்டிகையா என கேட்கலாம். வானில் தோன்றும் பிறை ரமலானுக்கும் பொருந்தும், பெளர்ணமிக்கும் பொருந்தும் அல்லவா அது போல தான் இந்துக்கள்- இஸ்லாமியர்களின் உறவு. 

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்று கடவுளே வாழ்க்கை, பிரார்த்தனையே பொழுதுபோக்கு என இருக்கும் இஸ்லாமியர்களைப்போல், இந்துக்களுக்கும் விரதம், மாலை போடுதல், பாதயாத்திரை என அனைத்து கடவுள் நம்பிக்கையும் உண்டு. இஸ்லாமியர்கள் நாள் முழுவதும் உண்ணாமல் 40 நாட்கள் நோன்பு இருந்து இரவில் சாப்பிடுவது போல், இந்துக்கள் வெள்ளி, செவ்வாய் விரதமிருந்து மற்ற நாட்களில்  சாப்பாடு சாப்பிடுகின்றனர். 

அல்லாவை வணங்கும் முஸ்லீம், முருகனை வணங்கும்  இந்துக்கள்! முஸ்லீம்களுக்கு எப்படி குர்ஆனோ அதுபோல தான் இந்துக்களுக்கு கந்தசஷ்டி கவசம்! இவ்வளவுதான் வேறுபாடு, நோன்பு, விரதம் ஆகிய இரண்டிலும் மறைந்து கிடப்பது உணவுக்கட்டுப்பாடும், ஆரோக்கிய நலனும் தான், மாறாக எல்லா பாவங்களிலிருந்தும் கிடைக்கும் விமோச்சனம் இல்லை. இதிலிருந்து விரதத்திற்கும் நோன்புக்கு விதிவிலக்கும் இல்லை, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே எந்த டீலீங்கும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

மதுரை அருகே உள்ள மேலூரில் நாவினிப்பட்டி, வடக்கு நாவினிப்பட்டி, கூத்தப்பன்பட்டி, சத்தியபுரம், முத்திருளாண்டிபட்டி, பெருமாள்பட்டி, கோவில்பட்டி ஆகிய 7 பட்டி கிராமங்கள் உள்ளனர். 7 ஊரில் உள்ள இந்துக்களும் இஸ்லாமியர்களும் ரம்ஜான் பண்டிகையன்று அய்யனார் கோவிலில் கிடா வெட்டி பூஜை போட்டு சமத்துவ பண்டிகை கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த பண்டிகை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் கொண்டாடப்படுகிறது. மாமன், மச்சான் என பழகும் அந்த கிராமத்து இந்து மற்றும் முஸ்லீம்களை போற்றுவதில் தப்பே இல்லை. மதங்களை கடந்து மனங்களை இணைக்கும் பண்டிகையாகவே ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. 

இவ்வளவு ஏன்? பஞ்சாப் மாநிலத்தில் காலிப் ரன் சிங் வால் என்ற கிராமத்தில் சீக்கியர்களும், இந்துக்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்காக கடந்த ஆண்டு மசூதி ஒன்றை கட்டி ரம்ஜான் பரிசாக அளித்துள்ளனர். இந்துக்கள்- இஸ்லாமியர்கள் இடையே மோதல் என பல இடங்களில் கூறப்பட்டாலும் உண்மையில் மதவெறிகளை மறந்து சகோதரத்துவத்துடனே இருபிரிவினர்களும் உள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.