சிறந்த டெஸ்ட் வீரர் அஷ்வின்.. "கார்ஃபீல்ட் சோபர்ஸ்" கோப்பை வென்றார்

  நந்தினி   | Last Modified : 22 Dec, 2016 02:25 pm
இந்த ஆண்டுக்கான சிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற விருதை இந்திய அணியின் பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டரான அஷ்வின் பெற்றுள்ளார். சிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரர் என்று அறிவிக்கப்பட்டதால், அஷ்வினுக்கு பெருமைக்குரிய Sir Garfield Sobers கோப்பை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அஷ்வின் 12 டெஸ்ட் போட்டிகளில் 72 விக்கெட்களும் 612 ரன்களும் குவித்து இருக்கிறார். மேலும், இந்த கோப்பையை வெல்லும் 3-வது இந்திய வீரர் மற்றும் சர்வதேச அளவில் 12-வது வீரர் என்ற பெருமையையும் அஷ்வின் பெற்றுள்ளார். ராகுல் டிராவிட்(2004), சச்சின் டெண்டுல்கர்(2010) ஆகியோர் இவ்விருதினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராகுல் டிராவிட்டுக்கு பிறகு இந்த இரு விருதுகளை ஒரே ஆண்டில் பெற்ற 2-வது இந்திய வீரர் என்ற சிறப்பு அந்தஸ்த்தையும் அஷ்வின் பெற்றுள்ளார். ஐசிசி வெளியிட்டிருக்கும் கனவு டெஸ்ட் அணியில் ஒரே ஒரு இந்திய வீரராக அஷ்வின் இடம் பிடித்திருக்கிறார். இது குறித்து அஷ்வின், "இந்த விருதுகளை எனது குடும்பத்தார்க்கு சமர்பிக்கிறேன். மேலும், ஐசிசி மற்றும் எனது சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close