ஐசிசி-ன் டெஸ்ட் அணியில் கோலி புறக்கணிப்பு

  நந்தினி   | Last Modified : 22 Dec, 2016 08:05 pm
2016ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த ஒருநாள் கனவு அணி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த அணிக்கு இந்தியாவின் நட்சத்திர வீரர் கோலி தலைமை தாங்குகிறார். இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கோலி தலைமையில் மொத்தம் 18 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், டெஸ்ட் கனவு அணிக்கு தேர்வாகவில்லை. மேலும், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு தோனி பதில் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட வேண்டும், என்ற கருத்து நிலவி வரும் நிலையில், கோலி கனவு அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் கனவு அணி: விராட் கோலி(கேப்டன்), ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), மிச்செல் மார்ஸ் (ஆஸி), மிச்செல் ஸ்டார்க் (ஆஸி), குவிண்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா), டிவில்லியர்ஸ் (தெ.ஆ), ககிசோ ரபாடா (தெ.ஆ), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), இம்ரான் தாகிர் (தெ.ஆ)- 12வது வீரர், சுனில் நரேன் (வெ.இ).

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close