டேவிஸ் கோப்பை: இந்திய அணியில் இருந்து போபண்ணா நீக்கம்

  நந்தினி   | Last Modified : 23 Dec, 2016 12:16 pm
நியூஸிலாந்துக்கு எதிராக புனேயில் நடைபெற இருக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இந்திய வீரர்கள் லியாண்டர் பயஸ், யுகி பாம்ப்ரி, சகெத் மைனெனி, ராம்குமார் ராமநாதன், பிராஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், ரோஹன் போபண்ணா மற்றும் சோம்தேவ் தேவ்வர்மன் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நீக்கம் குறித்து இந்திய சங்க தேர்வு குழு உறுப்பினர் கூறுகையில், "ரோஹன் போபண்ணாவை அணியில் சேர்த்தால் 3-வது ஒற்றையர் வீரரை அணியில் சேர்க்க முடியாத நிலை ஏற்படும். அத்துடன் பயஸும்- மைனேனியும் ஸ்பெயின் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதே நேரம் போபண்ணா- பயஸ் ஜோடி அத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. மேலும், சோம்தேவ் நீண்ட காலமாக எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளாததால் அவர் அணியில் சேர்க்கப்பட வில்லை" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close