ரசிகரின் மூக்கை உடைத்த அஷ்வின்!

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்ந்தெடுத்து ஐசிசி தனது கனவு அணிகளை அறிவித்தது. மேலும், இந்த ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட் வீரர் மற்றும் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற விருது, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணியின் அஷ்வினுக்கு வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு மழையில் நனைந்து வந்த அஷ்வின், ட்விட்டரில் தன்னிடம் கேள்வி கேட்கும் நேரம் இது என்ற ஹாஷ்டேக்கை போட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அஷ்வினிடம் ஆர்வமுடன் கேள்விகளை கேட்க தொடங்க, அதில் ஒரு ரசிகர், "அஷ்வின் அண்ணாவிடம் கேட்டுக்கொள்வதெல்லாம், அந்நிய மண்ணில் அவர் சாதிக்க வேண்டும் என்பது தான்" என்றார். இதற்கு பதிலளித்த அஷ்வின், "இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா எல்லாம் ரோட்டுல போர தூரத்துலையா இருக்கு?" என்று அந்த ரசிகர் மூக்கை உடைத்துள்ளார். தன் தவறை உடனே சரி செய்த அந்த ரசிகர், "நான் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா தொடரை சொன்னேன் அண்ணா" என்று பதிவு செய்திருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close