இந்திய அணியின் விளையாடாத கேப்டனாக மகேஷ் பூபதி நியமனம்

  நந்தினி   | Last Modified : 23 Dec, 2016 03:11 pm
டேவிஸ் கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் டென்னிஸ் போட்டி பிப்ரவரி மாதம் புனேயில் நடைபெற உள்ளது. இந்த போட்டியுடன், இந்திய அணியின் விளையாடாத கேப்டன் பதவியில் இருந்து ஆனந்த் அம்ரித்ராஜை விடுவித்துவிட்டு, 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்திய வீரர் மகேஷ் பூபதியை நியமிக்கின்றனர். முன்னதாக, டெல்லியில் டேவிஸ் கோப்பை போட்டி இரவில் நடத்தப்பட்டதை, அணியில் உள்ள வீரர்கள் சிலர் வெளிப்படையாக விமர்சனம் செய்தனர். அதை தடுக்க தவறியதுடன், வீரர்களுக்கு ஆதரவாக ஆனந்த் அம்ரித்ராஜ் செயல்பட்டதால், அதிருப்தியில் இருந்த இந்திய டென்னிஸ் சங்கம் அவரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தனர். ஆனால், அம்ரித்ராஜை நீக்க கூடாது என்று சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி, சாகெத் மைனேனி, ராம்குமார் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close