தங்கமகன் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு- முதல்வர் வழங்கினார்

  நந்தினி   | Last Modified : 23 Dec, 2016 06:04 pm
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு தமிழ்நாடு முதல்வர் திரு.ஓ. பன்னீர்செல்வம், ஊக்கத்தொகையை ரூ.2 கோடி பரிசை இன்று வழங்கினார். இது குறித்த தமிழ்நாடு அரசின் அறிக்கையில், "பிரேசில் நாட்டின், ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக்(2016) உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த த.மாரியப்பனுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு, தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று 10.9.2016 அன்று அறிவித்தார். முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பின்படி, தங்கப் பதக்கம் வென்ற த.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத்தொகை 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வழங்கி வாழ்த்தினார்" என்று கூறப்பட்டிருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close