இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஷமி விளையாடுவாரா?

  நந்தினி   | Last Modified : 23 Dec, 2016 08:21 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முகமது ஷமிக்கு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வலது காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். தற்போது காயத்தில் இருந்து குணமடையாததால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் ஷமி இடம் பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஷமிக்கு பதில் இஷாந்த் ஷர்மா அல்லது ஆசிஷ் நெஹ்ரா இடம் பெறலாம் என்று கருதப்படுகிறது. மேலும், தேர்வு குழு, ஷிகர் தவானை மீண்டும் களத்தில் இறங்க விடலாம் அல்லது முச்சதம் அடித்த கருண் நாயரை ரோஹித் ஷர்மாவுக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்யலாம் என்றும் தெரிகிறது. ரஹானே, கை விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close