இலங்கையை வீழ்த்தி U-19 ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கொழும்பில் நடந்த U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை விழ்த்தி கோப்பையை இந்தியா கைப்பற்றியது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 8 விக்கெட்கள் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது. ஹிமன்ஷு ராணா 71 ரன்களும், ஷூப்மான் கில் 70 ரன்களும் எடுத்தனர். ஆனால், சொந்த மண்னில் விளையாடிய இலங்கை அணியால் இந்த ஸ்கோரை எட்ட முடியவில்லை. இந்திய கேப்டன் அபிஷேக் ஷர்மா பேட்டிங்கில் 29 ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல் அசத்தல் பவுலிங்கில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இறுதியில் 239 ரன்களில் இலங்கை ஆல் அவுட் ஆனது. இலங்கை வீரர்கள் ரெவன் கெல்லி 62 ரன்களும், ஹசிதா போயகோடா 37 ரன்களும் எடுத்தனர். முன்னதாக, இந்த கோப்பையின் குரூப் போட்டியிலும் இந்தியா இலங்கையை வீழ்த்தியிருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close