ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்து மொயீன் அலி சாதனை

  நந்தினி   | Last Modified : 24 Dec, 2016 12:39 pm
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான மொயீன் அலி, இந்த ஆண்டு மொத்தம் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1078 ரன்கள் குவித்தும், 30 விக்கெட்கள் வீழ்த்தியும், ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 1982ல் இங்கிலாந்து வீரர் ஐயன் போத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் 1095 ரன்கள் மற்றும் 47 விக்கெட்கள் கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் கல்லிஸ் (2001, 14 டெஸ்ட், 1120 ரன்கள், 35 விக்கெட்கள்) 2-வது இடத்தில் உள்ளார். மேலும், இந்த ஆண்டில் 1000 ரன்களை கடந்த 5-வது வீரர் மொயீன் அலி ஆவார். இங்கிலாந்தின் ஜோ ரூட்(1477), ஜானி பேர்ஸ்டோவ்(1470), அலக்ஸ்டர் குக்(1270), இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி(1215) ஆகியோர் இந்த ஆண்டில் இத்தனை ரன்களை குவித்து முதல் 4 இடத்தில் உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close