கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய டக் அவுட்டான வீரர் இவர் தான்!

  mayuran   | Last Modified : 24 Dec, 2016 05:10 pm
கிரிக்கெட் போட்டியில் அதிக பந்துகள் விளையாடி குறைந்த ரன்கள் சேர்ப்பது வாடிக்கையான விஷயம் தான் என்றாலும், நியூஸிலாந்தைச் சேர்ந்த பந்து வீச்சாளர் Geoff Allott அதிலும் சாதனை படைத்து கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். பிப்ரவரி 27, 1999ம் ஆண்டு நியூஸிலாந்து- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் கடைசியாக பேட்டிங் செய்ய களமிறங்கிய Geoff Allott, மைதானத்தில் 101 நிமிடங்களில் 77 பந்துகளை எதிர்க் கொண்டார். இருப்பினும் கடைசி வரை ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். அல்லோட் உலகக் கோப்பையின் ஒரே போட்டித் தொடரில் 20 விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர். அதிக பந்துகளை எதிர்க் கொண்டு மிகப்பெரிய டக் அவுட்டான கியோஃப் அல்லோட்டின் பிறந்த தினம் (24-12-1971) இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close