ஓய்வு பெறப்போவதில்லை: அடம்பிடிக்கும் அஃப்ரிடி

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடைசியாக ஒரு 'ஃபேர்வெல்' போட்டிக்காக காத்திருப்பதாக வரும் செய்திகளை மறுத்துள்ள முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, தற்போதைக்கு ஓய்வுபெறுவதாக இல்லை என கூறியுள்ளார். "கடந்த 20 வருடங்களாக நான் பாகிஸ்தான் நாட்டுக்காக விளையாடியுள்ளேன். கிரிக்கெட் போர்டுக்காக இல்லை. கடைசி போட்டிக்காக யாரிடமும் காத்திருக்கவில்லை. ரசிகர்களிடம் இருந்து எனக்கு இதுவரை கிடைத்துள்ள ஆதரவும், அன்பும் போதுமானது," என்று கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் முடிந்த டி20 உலகக்கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய அஃப்ரிடிக்கு, இனி பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். "என் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை. என்னால் சர்வதேச அளவில் இப்போதும் விளையாட முடியும். ஆனால், பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவேனா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தேர்வுக்குழு உறுப்பினர்கள் தான்," என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close