"ரொனால்டோவை விட மெஸ்ஸி ஒரு படி மேல"

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளர் பெப் கார்டியோலா, உலகின் சிறந்த வீரர் யார் என்று கேட்டபோது, தயக்கமில்லாமல் மெஸ்ஸி தான் என கூறினார். இந்த வருடத்தின் சிறந்த வீரருக்கான பலோன் டி'ஓர் விருதை ரொனால்டோ தட்டிச்சென்றார். ரொனால்டோ விளையாடிய அணிகள் முக்கிய கோப்பைளை வென்றாலும், அவரின் தன்னிச்சையான பங்களிப்பு மெஸ்ஸி அளவுக்கு இல்லை, என்ற கருது நிலவி வருகிறது. இந்நிலையில் மெஸ்ஸியின் பழைய பயிற்சியாளர் பெப், "ரொனால்டோ மிகவும் சிறப்பான வீரர்தான். ஆனால், தற்போதைய வீரர்கள் எல்லோரையும் விட மெஸ்ஸி ஒரு படி மேல். கோல் அடிப்பது மட்டுமில்லாமல், பாஸ் செய்வதிலும் மெஸ்ஸி அளவுக்கு யாரும் கிடையாது. மெஸ்ஸியால் மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாடுகின்றனர்," என்றார். மெஸ்ஸியின் தற்போதைய பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கே, "மற்றவர்களுடன் மெஸ்ஸியை ஒப்பிடுவது வேடிக்கையாக உள்ளது," என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close