இந்திய தடகள வீராங்கனை குமாரி சங்கீதாவின் பரிதாப நிலை

Last Modified : 11 Jul, 2017 05:57 pm
ஓடிசா மாநி­லம் புவ­னேஸ்­வர் நக­ரில் உள்ள கலிங்கா விளை­யாட்டு அரங்­கத்­தில் 22வது ஆசிய தட­கள சாம்­பியன்­ஷிப் போட்­டி­கள் நடைபெற்றன. இதில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், கடைசி நாளான ஜூலை 9 அன்று கம்பம் தாண்டுதல் போட்டியில் குமாரி சங்கீதா பங்கேற்றார். போட்டியில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து விலகினார். நேற்று ஒடிசாவில் நடந்த வெற்றி விழாவில் சங்கீதா கலந்து கொள்ள அழைக்கவில்லை. விழா நடக்கும் அதே ஹோட்டலில் தான் சங்கீதாவும் தங்கி இருந்தார். இது குறித்து அவரின் பயிற்சியாளர் கூறுகையில், போட்டியின் போது காயமடைந்த வீரர்களுக்கான மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும், இல்லையெனில் அவர்கள் சொந்தமாக செலவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், அவர் காயமடைந்தது 3 மணி நேரத்திற்கு பின்பே சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். வரும் ஜூலை 13ம் தேதி சங்கீதா சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள இருந்த நிலையில், தற்போது அதில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close