மீண்டும் முதலிடத்தை கைப்பற்றிய ரபேல் நடால்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ள புதிய ஆண்கள் தரவரிசைப் பட்டியலில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் முதலிடத்தை பிடித்துள்ளார். 2008ம் ஆண்டிற்கு பிறகு முதலிடத்தை நடால் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். காயம் காரணமாக சின்சினாட்டி ஓபன் போட்டியில் இருந்து முர்ரே விலகினார். இதன் காரணமாக தனது முதலிடத்தை முர்ரே இழக்க நேரிட்டது. 3-வது இடத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உள்ளார். யுஎஸ் ஓபன் போட்டியில் இருந்து விலகிய ஸ்டான் வாவ்ரிங்கா 4-வது மற்றும் நோவக் ஜோகோவிச் 5-வது இடங்களுக்கு இறங்கியுள்ளனர். யுஎஸ் ஓபன் தொடருக்கு பிறகு, இவர்களின் தரவரிசை இன்னும் இறங்கப்படலாம். ஜெர்மனியின் ஸ்வேரெவ் 6-வது, குரோவேஷியாவின் மாரின் சிலிக் 7-வது, ஆஸ்திரியாவின் டோமினிக் தெய்ம் 8-வது இடங்களிலும் உள்ளனர். சின்சினாட்டி ஓபன் பட்டத்தை வென்ற பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் 9-வது இடத்திற்கு முன்னேறினார். ஜப்பானின் நிஷிகோரி 10-வது இடத்தை பிடித்திருக்கிறார். சின்சினாட்டி காலிறுதியில், நடாலை வென்றிருந்த ஆஸி.யின் கிர்ஜியோஸ் 18-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close