அபார்ட்மென்ட்ஸ் குறித்துக் கேள்வி ; ஆங்க்ரி மோடில் ஹர்பஜன்

  jvp   | Last Modified : 22 Aug, 2017 05:18 pm

அஷ்வின் 'ரெஸ்ட்' குறித்து நேற்றுதான் சர்ச்சையை கிளப்பி கொஞ்சம் அமைதியானார் ஹர்பஜன் சிங். தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார். அதாவது ட்விட்டரில் அமரபள்ளி க்ரூப்ஸில் அபார்மென்ட் வாங்கிய ஒருவர் அதிலே போதிய வசதியில்லை என்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு இலவசமாகக் கொடுத்த அபார்ட்மென்ட்ஸ் மட்டும் நன்றாக இருக்கிறது என தெரிவித்தார். இதைப் பார்த்துக் கடுப்பான ஹர்பஜன் "2011 உலககோப்பையை வென்ற அணி வீரர்களுக்கு வீடுகளைத் தருவதாகச் சொன்னது உண்மைதான். ஆனால் இதுவரை எங்களுக்கு அது கிடைக்கவில்லை. உங்களுக்கு அந்த அபார்ட்மென்ட் மீது தனிப்பட்ட புகார் இருந்தால் அதைத் தனியாகப் பார்த்துக்கொள்ளுங்கள் அதில் கிரிக்கெட் வீரர்களை இழுக்கவேண்டாம்" என்றார்.அந்த நிறுவன உரிமையாளர் தோனிக்கு நண்பர்தார்னே எப்படி கொடுக்காமல் இருப்பார்? என வந்த இன்னொரு ட்வீட்டிற்கு, அவர் தோனிக்குதான் நண்பர்; எனக்கு அல்ல என மீண்டும் தடாலடி பதிலைத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
[X] Close