'வந்துட்டேன்னு சொல்லு' - மீண்டும் களம் காண்கின்றார் கெய்ல்!

  jvp   | Last Modified : 23 Aug, 2017 12:24 pm

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி ஆட்டக்காரர் க்ரிஸ் கெய்ல். "அடிச்சா சிக்ஸ்ர்தான் சார்" பாணியில் விளையாடும் அவருக்கு அந்த அதிரடி ஆட்டத்திற்காகவே பல ரசிகர்கள் உண்டு. களத்தில் வெகுநேரம் நின்றால் பார்வையாளர்களுக்கு ஃபுல் மீல்ஸ் ரெடி என்றே சொல்லலாம். இருந்தபோதும் 2015 உலககோப்பையின் பின் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால், கடந்த இரண்டு வருடங்களாக ஒதுங்கியே இருந்து வந்தார். இந்த நிலையில் அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் கெய்ல் களம் இறங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 19 முதல் 29 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதேநேரத்தில், ட்வெயின் பிராவோவுக்கு காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் கிடைக்கவில்லை.

Advertisement:
[X] Close